மூத்த குடிமக்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் என்னும் நிரந்தர வைப்பு நிதி திட்டங்கள் பெரிதும் உதவியாக உள்ளன. இதில் சில வங்கிகள் மாறிவரும் பணவீக்கத்துக்கு ஏற்ப நல்ல வட்டியை வழங்குகின்றன.
இந்த ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு முதிர்ச்சி காலம் உண்டு. அந்தக் காலம் முதல் 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்த 5 வங்கிகள் 2 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு கூட 7.50 சதவீதம் முதல் 8.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
உத்கர்ஸ் சிறுநிதி வங்கி (Utkarsh Small Finance Bank)
ஆகஸ்ட் 12, 2022 அன்று, வங்கி தனது நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை கடைசியாக மாற்றியது. புதிய விகிதங்கள் புதிய நிலையான வைப்பு மற்றும் ஏற்கனவே உள்ள நிலையான வைப்புகளை புதுப்பித்தல் ஆகிய இரண்டிற்கும் பயனுள்ளதாக இருக்கும்.
வங்கி மூத்த குடிமக்களுக்கு 8.25 சதவீத வட்டி விகிதத்தில் 2 ஆண்டுகள் அல்லது 730 நாட்களுக்கு நிலையான வைப்புகளை வழங்குகிறது. வங்கி பொது மக்களுக்கு 7.50% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8.25% நிலையான வைப்புத்தொகையை 700 நாட்கள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையச் செய்கிறது.
இது வங்கித் துறையில் மிக உயர்ந்த விகிதமாக மட்டுமல்லாமல், தற்போதைய சில்லறை பணவீக்க விகிதத்தை விடவும் அதிகமாக உள்ளது.
ஜனா சிறுநிதி வங்கி (Jana Small Finance Bank)
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி வழங்கும் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்கள் ஜூன் 15, 2022 முதல் அமலுக்கு வருகின்றன.
இந்த விதிகள் ரூ. 2 கோடிக்குக் கீழ் உள்ள டெபாசிட்டுகளுக்குப் பொருந்துகின்றன.
தற்சமயம், ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி முதியோர்களுக்கு 1 முதல் 2 ஆண்டுகள் வரை முதிர்வு காலத்துடன் கூடிய நிலையான வைப்புகளுக்கு 8.05% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
பந்தன் வங்கி (Bandhan Bank)
ஆகஸ்ட் 22, 2022 முதல், பந்தன் வங்கியின் நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் நடைமுறையில் உள்ளன. புதிய விகிதங்கள், ரூ.2 கோடிக்கு குறைவான சில்லறை கணக்குகளுக்கு பொருந்தும்.
பந்தன் வங்கி 18 மாதங்களுக்கும் மேலாக முதிர்ச்சியடையும் மூத்த குடிமக்களுக்கு 7.50% வட்டி விகிதம் வழங்குகிறது.
இந்தஸ்இந்த் வங்கி (IndusInd Bank)
ஒரு ஆண்டுக்கு 7 மாதங்கள் வரையிலான முன்கூட்டியே முறித்துக் கொள்ளும் ரூ.2 கோடிக்குள்ளான ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு 7.50 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
யெஸ் வங்கி (Yes Bank)
யெஸ் பேங்கின் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்கள் ஆகஸ்ட் 10, 2022 முதல் நடைமுறைக்கு வருகின்றன.
அதன்படி, யெஸ் பேங்க் ஃபிக்ஸட் டெபாசிட்கள் குறைந்தபட்சமாக 10,000 ரூபாய் முதல் கிடைக்கின்றன.
இது குறைந்ததப்பட்சம் 6 மாதங்கள் மற்றும் 1 நாள் காலத்துக்கு மறு முதலீடு அனுமதிக்கப்படும். யெஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு 18 மாதங்கள் முதல் 3 ஆண்டுகளுக்குள் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 7.50% வட்டி விகிதத்தை உறுதியளிக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.