ஆக்ஸிஸ் வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, கனரா வங்கி, சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, ஈகுடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை ஆகஸ்ட் மாதத்தில் திருத்தியுள்ளன.
தற்போது இந்த வங்கிகள் எஃப்டி முதலீடுகளுக்கு 8.6 சதவீதம் முதல் 9.1 சதவீதம் வரை வ்டடி வழங்குகின்றன.
ஆக்ஸிஸ் வங்கி
ஆக்ஸிஸ் வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு பொதுமக்களுக்கு 3.5 சதவீதம் முதல் 7.2 சதவீதம் வரையும், மூத்தக் குடிமக்களுக்கு 3.5 சதவீதம் முதல் 7.95 சதவீதம் வரையும் வட்டி வழங்குகிறது.
இண்டஸ்இந்த் வங்கி
இண்டஸ்இந்த் வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு பொதுமக்களுக்கு 3.5 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரையும், மூத்தக் குடிமக்களுக்கு 4.25 சதவீதம் முதல் 8.25 சதவீதம் வரையும் வட்டி வழங்குகிறது.
கனரா வங்கி
கனரா வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு பொதுமக்களுக்கு 4 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரையும், மூத்தக் குடிமக்களுக்கு 4.25 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரையும் வட்டி வழங்குகிறது.
சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு பொதுமக்களுக்கு 4 சதவீதம் முதல் 8.6 சதவீதம் வரையும், மூத்தக் குடிமக்களுக்கு 4.5 சதவீதம் முதல் 9.1 சதவீதம் வரையும் வட்டி வழங்குகிறது.
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு பொதுமக்களுக்கு 4 சதவீதம் முதல் 8.5 சதவீதம் வரையும், மூத்தக் குடிமக்களுக்கு 4.6 சதவீதம் முதல் 9.1 சதவீதம் வரையும் வட்டி வழங்குகிறது.
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு பொதுமக்களுக்கு 3 சதவீதம் முதல் 8.5 சதவீதம் வரையும், மூத்தக் குடிமக்களுக்கு 3.5 சதவீதம் முதல் 9 சதவீதம் வரையும் வட்டி வழங்குகிறது.
ஈகுடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
ஈகுடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு பொதுமக்களுக்கு 3.5 சதவீதம் முதல் 8.5 சதவீதம் வரையும், மூத்தக் குடிமக்களுக்கு 4 சதவீதம் முதல் 9 சதவீதம் வரையும் வட்டி வழங்குகிறது.
ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளில் ரூ.5 லட்சம் வரை உள்ள முதலீடுகளே அரசின் காப்பீடு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“