நாம் செய்யும் டெபாசிட் செய்யும் தொகையானது பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். அதோடு வட்டி விகிதமும் சற்று கூடுதலாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் இங்கு அதிகம்.வங்கிகளில் நிலையான வைப்பு நிதி (FD) திட்டங்களை விட சேமிப்புக் கணக்குகளுக்கு குறைந்த அளவிலேயே வட்டி கிடைக்கிறது. ஆனாலும் சில தனியார் வங்கிகளில் ஓரளவுக்கு வட்டி லாபம் கிடைக்கிறது.எந்தெந்த வங்கியில் எவ்வளவு வட்டி கிடைக்கிறது என்ற விவரத்தை இங்கே பார்க்கலாம்.
டிசிபி வங்கி
டிசிபி வங்கியில் வட்டி விகிதம் 6.75% ஆகும். இந்த வங்கியில் மினிமம் பேலன்ஸ் ரூ.2500 முதல் ரூ.5000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பந்தன் பேங்க்
பந்தன் வங்கியில் 6% வரை சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி வழங்கப்படுகிறது. இந்த வங்கியில் மினிமம் பேலன்ஸ் 5000 ரூபாயாகும்.
RBL வங்கி
ஆர்பிஎல் வங்கியில் சேமிப்பு கணக்குகளுக்கு 6.25% வரையில் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வங்கியில் மினிமம் பேலன்ஸ் ரூ.2500 - 5000 ஆகும்.
இந்தஸ்இந்த் வங்கி
இந்தஸ்இந்த் வங்கியில் 5% வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்த வங்கியிலும் மினிமம் பேலன்ஸ் தொகையானது 1500- 10,000 ரூபாயாகும்.
YES வங்கி
யெஸ் பேங்கில் சேமிப்பு கணக்குகளுக்கு 5.25% வரை வட்டி வழங்கப்படுகிறது. ஆனால் யெஸ் வங்கியில் மினிமம் பேலன்ஸ் ரூ.10,000 முதல் ரூ.25,000 ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil