/tamil-ie/media/media_files/uploads/2021/04/rajini-12.jpg)
IFSC codes update : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 10 வங்கிகளை நான்காக மாற்ற புதிய அறிவிப்புகளை ஆகஸ்ட் மாதம் 2019ம் ஆண்டு அறிவித்தார். சமீபத்தில் நிறைய வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டன. இந்தியாவில் வங்கி சேவைகளுக்கு தேவையான மிக முக்கிய அம்சமாக விளங்குகிறது ஐ.எஃப்.எஸ்.சி கோடுகள் (Indian Financial System Codes). இவை இருந்தால் மட்டுமே இணைய சேவைகளாக நெஃப்ட், ஆர்.டி.ஜி.எஸ் மற்றும் ஐ.எம்.பி.எஸ் போன்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
வங்கிகள் இணைக்கப்பட்டு புதிய பெயர்களில் செயல்பட்டு வருகின்ற சூழலால் இனி பழைய ஐ.எஃப்.எஸ்.சி. கோடுகளை பயன்படுத்த இயலாது.
சிண்டிகேட் வங்கி, அலகாபாத் வங்கி, தேனா வங்கி, யூனைடட் பேங்க் ஆஃப் இந்தியா, விஜயா வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேசன் வங்கிஆகிய வங்கிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இந்த வங்கிகளில் தங்களின் கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் வங்கிகளிடம் இருந்து புதிய ஐ.எஃப்.எஸ்.சி கோடுகளை பெற்ற பிறகு பரிவர்த்தனை சேவைகளை துவங்க முடியும்.
ஆன்லைன், வங்கிக் கிளைகளுக்கு நேரில் செல்வது அல்லது டோல் ஃபிரீ எண்களுக்கு அழைத்து தங்கள் வங்கிகளின் புதிய ஐ.எஃப்.எஸ்.சி. கோடுகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள இயலும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.