பணத்தை மிச்சப்படுத்த சூப்பர் வழி; ஆண்டு கட்டணமே இல்லாத கிரெடிட் கார்டுகள்: இந்த லிஸ்டை நோட் பண்ணுங்க

நீங்கள் கிரெடிட் கார்டை குறைவாகவோ அல்லது எப்போதாவது மட்டுமே பயன்படுத்துபவராக இருந்தால், ஆண்டு கட்டணம் இல்லாத கிரெடிட் கார்டை (Zero Annual Fee Credit Card) தேர்வு செய்வது நல்லது.

நீங்கள் கிரெடிட் கார்டை குறைவாகவோ அல்லது எப்போதாவது மட்டுமே பயன்படுத்துபவராக இருந்தால், ஆண்டு கட்டணம் இல்லாத கிரெடிட் கார்டை (Zero Annual Fee Credit Card) தேர்வு செய்வது நல்லது.

author-image
WebDesk
New Update
Credit card offers

கிரெடிட் கார்டுகளுக்கு ஒப்புதல் பெறுவது இப்போதெல்லாம் மிகவும் எளிதாகிவிட்டது. இருப்பினும், பல கிரெடிட் கார்டுகள் அதிக ஆண்டு கட்டணத்தை வசூலிக்கின்றன. இதனால், கிடைக்கும் சலுகைகள் ஆண்டு கட்டணத்தால் ஈடுசெய்யப்படுகின்றன. எனவே, நீங்கள் கிரெடிட் கார்டை குறைவாகவோ அல்லது எப்போதாவது மட்டுமே பயன்படுத்துபவராக இருந்தால், ஆண்டு கட்டணம் இல்லாத கிரெடிட் கார்டை (Zero Annual Fee Credit Card) தேர்வு செய்வது நல்லது.

Advertisment

இங்கு, ஆண்டு கட்டணம் இல்லாத சில கிரெடிட் கார்டுகளைப் பற்றிப் பார்ப்போம். இந்த பட்டியலில் ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் மற்றும் ஆக்ஸிஸ் பேங்க் வழங்கும் கார்டுகள் அடங்கும். இந்தக் கார்டுகளில் கிடைக்கும் சலுகைகள் மிக அடிப்படையானதாக இருந்தாலும், ஆண்டு கட்டணம் இல்லாதது ஒரு பெரிய நன்மை ஆகும்.

ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் கிளாஸிக் கிரெடிட் கார்டு (IDFC FIRST Classic Credit Card):

இந்த கிரெடிட் கார்டுக்கு ஆண்டு கட்டணம் இல்லை. உங்களுக்குப் பிடித்த பிராண்டில் இருந்து ரூ. 500 வவுச்சர் கிடைக்கும். முதல் இ.எம்.ஐ-யில் ரூ. 1,000 வரை கேஷ்பேக் பெறலாம். சினிமா டிக்கெட்டுகளுக்கு 25% தள்ளுபடி. எரிபொருள் கூடுதல் கட்டணத்தில் 1% தள்ளுபடி பெற முடியும். 300-க்கும் மேற்பட்ட வணிகர் சலுகைகள் இதில் கிடைக்கும்.

Advertisment
Advertisements

அமேசான் பே ஐ.சி.ஐ.சி.ஐ கிரெடிட் கார்டு (Amazon Pay ICICI Credit Card):

இந்த கிரெடிட் கார்டும் ஆண்டு கட்டணம் வசூலிப்பதில்லை. மேலும், இது காலாவதியாகாத ரிவார்டுகளை வழங்குகிறது. எரிபொருள் வாங்குதல்களில் கூடுதல் கட்டணத் தள்ளுபடி கிடைக்கும். பிரைம் உறுப்பினர்கள் அமேசானில் 5% ரிவார்டு பாயிண்ட்ஸ் பெறுகின்றனர். பிரைம் அல்லாத உறுப்பினர்களுக்கு அமேசானில் 3% ரிவார்டு பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

பேங்க் ஆஃப் பரோடா ப்ரைம் கிரெடிட் கார்டு (Bank of Baroda Prime Credit Card):

இந்த கிரெடிட் கார்டுக்கு ஆண்டு கட்டணம் இல்லை. கார்டு கிடைத்த 60 நாட்களுக்குள் ரூ. 5,000 செலவு செய்தால் 500 ரிவார்டு பாயிண்ட்ஸ் பெறலாம். ரூ. 15,000 அல்லது அதற்கு மேற்பட்ட நிலையான வைப்பு நிதிக்கு (FD) வருமானச் சான்று இல்லாமல் இந்தக் கார்டு வழங்கப்படும். மற்ற அனைத்து வகைகளிலும் ரூ. 100 செலவுக்கு 2 ரிவார்டு பாயிண்ட்ஸ் கிடைக்கும். ரூ. 2,500-க்கு மேல் வாங்கும் பொருட்களை 6 முதல் 48 மாதங்கள் வரை ஸ்மார்ட் இ.எம்.ஐ-ஆக மாற்றலாம்.

ஆக்ஸிஸ் பேங்க் நியோ கிரெடிட் கார்டு (Axis Bank Neo Credit Card):

இந்த கார்டுக்கு முதல் ஆண்டில் ஆண்டு கட்டணம் இல்லை. ஆனால், இரண்டாம் ஆண்டு முதல் ரூ. 250 கட்டணம் வசூலிக்கப்படும். நியோ கிரெடிட் கார்டு மூலம் உணவு டெலிவரியில் ரூ. 120 தள்ளுபடி உண்டு. பேடிஎம் மூலம் செய்யப்படும் மொபைல் ரீசார்ஜ்கள், பிராட்பேண்ட் பில்கள் மற்றும் டி.டி.ஹெச் ரீசார்ஜ்களுக்கு 5% தள்ளுபடி கிடைக்கும். இந்தியாவில் உள்ள பார்ட்னர் உணவகங்களில் 15% வரை தள்ளுபடி பெறலாம்.

இந்த கிரெடிட் கார்டுகள் ஆண்டு கட்டணம் இல்லாமல் அடிப்படை சலுகைகளை வழங்குவதால், உங்கள் தேவைகளுக்கேற்ப சரியான கார்டை தேர்ந்தெடுத்து பயன்பெறலாம்.

Credit card

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: