Advertisment

எஃப்.டி-க்கு 8% வட்டி: இந்த வங்கிகளை மிஸ் பண்ணிராதீங்க!

பாங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்களுக்கான (₹2 கோடி மற்றும் அதற்கு மேல் ரூ.10 கோடிக்கும் குறைவாக) நிலையான வைப்புத்தொகையை டிசம்பர் 1, 2023 முதல் உயர்த்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Hoe to get more income from fixed deposits? - நிலையான வைப்புத் தொகை மூலம் அதிக வருமானம் பெறுவது எப்படி?

பாங்க் ஆஃப் இந்தியா, கோடக் மஹிந்திரா வங்கி, டிசிபி வங்கி மற்றும் ஃபெடரல் வங்கி உட்பட பல வங்கிகள் டிசம்பர் 2023 இல் தங்களுடைய நிலையான வைப்பு வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

fixed-deposits | ஃபிக்ஸட் டெபாசிட் (FD) வட்டி உயர்வு சகாப்தம் இன்னும் முடிவடையவில்லை என்று தெரிகிறது. இந்திய ரிசர்வ் வங்கி ஐந்தாவது முறையாக முக்கிய ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாக பராமரிக்கும் நிலையில் வங்கிகள் எஃப்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன.

Advertisment

பேங்க் ஆஃப் இந்தியா

பாங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்களுக்கான (₹2 கோடி மற்றும் அதற்கு மேல் ரூ.10 கோடிக்கும் குறைவாக) நிலையான வைப்புத்தொகையை டிசம்பர் 1, 2023 முதல் உயர்த்தியுள்ளது.

தற்போது, 46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 5.25% வட்டி கிடைக்கும். 91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை டெபாசிட்களுக்கு 6.00%, 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை டெபாசிட்களுக்கு 6.25%, 211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கு குறைவான டெபாசிட்களுக்கு 6.50% வட்டி கிடைக்கும். அதேநேரத்தில் ஓராண்டு டெபாசிட்களுக்கு 7.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.

கோடக் மஹிந்திரா வங்கி

கோடக் மஹிந்திரா வங்கி மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது.

சமீபத்திய திருத்தத்திற்குப் பிறகு, கோடக் வங்கியானது ஏழு நாட்கள் முதல் பத்து வருடங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 2.75% முதல் 7.25% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.

மூத்த குடிமக்களுக்கு இந்த வைப்புத்தொகைகளில் 3.35% முதல் 7.80% வரையிலும் வட்டி விகிதத்தை பெறலாம். இந்த வட்டி விகிதங்கள் 11 டிசம்பர் 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன.

டிசிபி வங்கி

டிசிபி வங்கி திருத்தத்திற்குப் பிறகு, பொது வாடிக்கையாளர்களுக்கு 8% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8.60% என்ற அதிகபட்ச FD வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது.

மேலும் டிசிபி (DCB) வங்கியானது 3.75% முதல் 8% வரையிலான வட்டி விகிதத்தை ஏழு நாட்களில் இருந்து பத்து வருடங்களில் முதிர்ச்சியடையும் பொது வாடிக்கையாளர்களுக்கு 4.25% முதல் 8.60% வரையிலும், வயதானவர்களுக்கு 4.25% முதல் 8.60% வரையிலும் வழங்குகிறது.

பெடரல் வங்கி

ஃபெடரல் வங்கி தனது டெபாசிட் வட்டி விகிதங்களை டிசம்பர் 5, 2023 முதல் மாற்றியமைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, 500 நாள்கள் டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் 7.50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கு, 8.15% சதவீதம் வரை வட்டி விகிதம் பெறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment