நீங்கள் உங்கள் பணத்தை முதலீடு செய்ய நினைத்தால், அதேநேரம் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றால், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்கள் (FDகள்) தவிர, உங்கள் பணத்தை போஸ்ட் ஆஃபீஸ் சேமிப்பு திட்டங்களிலும் முதலீடு செய்யலாம்.
இலாபகரமான வட்டி விகிதத்தைத் தவிர, இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வது அரசாங்கப் பாதுகாப்பு மற்றும் வரி விலக்கின் இரட்டைச் சலுகையை வழங்குகிறது.
இந்திய அஞ்சல் முதலீட்டாளர்களுக்கு பல டெபாசிட் விருப்பங்களை வழங்குகிறது, பொதுவாக தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் என அழைக்கப்படுகிறது. தற்போது, அரசு 9 தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது.
இந்த ஒன்பது சிறு சேமிப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC), தபால் அலுவலக நேர வைப்பு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) ஆகியவை அடங்கும்.
இந்தத் திட்டங்களில் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதங்களை அரசாங்கம் திருத்தும். இதற்குப் பிறகு, இந்த திட்டங்களில் சில, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ், பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) உள்ளிட்ட வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட்டை காட்டிலும் அதிக வட்டி வழங்குகின்றன.
அஞ்சலக திட்டங்கள்:
செல்வ மகள் சேமிப்புத் திட்டம்
12 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கான இந்தப் பிரத்யேக திட்டத்தில் அரசு 8 சதவீதம் வட்டி வழங்குகிறது.
தேசிய சேமிப்பு சான்றிதழ்
இந்தத் திட்டத்தில் 7.7 சதவீதம் கிடைக்கிறது. மேலும் 80சி வரிச் சலுகையும் உள்ளது.
போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்
வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்கள் (FDகள்) போலவே, தபால் அலுவலகமும் ஒரு வருடம், இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் மற்றும் ஐந்து வருடங்களுக்கான கால வைப்புகளை வழங்குகிறது.
5 ஆண்டு கால அஞ்சலக வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்தால், ஒரு நிதியாண்டில் ₹1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். தற்போது, 5 ஆண்டு அஞ்சல் அலுவலக வைப்புத் திட்டத்துக்கு 7.5% வட்டி கிடைக்கிறது.
வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்:
எஸ்பிஐ 3-7.10 சதவீதம் வரையும், ஹெச்டிஎஃப்சி 3-7.1 சதவீதம் வரையும், ஐசிஐசிஐ வங்கி 3-7.10 சதவீதம் வரையும், ஆக்ஸிஸ் வங்கி 3.5-7.1 சதவீதமும், பஞ்சாப் நேஷனல் வங்கி 3.5-7.25 சதவீதம் வரையும், பேங்க் ஆஃப் பரோடா 3-7.25 சதவீதம் வரையும் பொதுமக்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் வட்டி வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“