இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ விகிதத்தை உயர்த்தத் தொடங்கிய பிறகு, வங்கிகள், சிறு நிதி வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (என்பிஎஃப்சி) உள்ளிட்ட கடன் வழங்கு நிறுவனங்கள் மே 2022 முதல் தங்கள் நிலையான வைப்பு (எஃப்டி) வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றனர். இந்த நிறுவனங்கள் 9% வரை வட்டி வழங்குகின்றன.
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி பொது மக்களுக்கு 9 சதவீதம் வரை வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 9.50 சதவீதம் வரை நிலையான வைப்பு வட்டியும் வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 9.50 சதவீத வட்டி விகிதம் 1001 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அதேசமயம் மூத்த குடிமக்களுக்கு 181-201 நாட்கள் மற்றும் 501 நாட்களுக்கு 9.25 சதவீத வட்டி வழங்குகிறது.
ஸ்ரீராம் நிதி நிறுவனம்
ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனம் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 9.10 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீத வட்டியும், பெண்களுக்கு 0.10 சதவீத வட்டியும் இதில் அடங்கும்.
12 மாத FD திட்டத்திற்கு பொதுமக்களுக்கு 7.34 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 7.84 சதவீதமும் வழங்குகிறது. 18, 24 மற்றும் 31 மாத திட்டங்களுக்கு முறையே 7.48 சதவீதம், 7.76 சதவீதம் மற்றும் 7.90 சதவீதம் வழங்குகிறது. அதேபோல் 36, 42, 48 மற்றும் 60 மாத FD திட்டங்களுக்கு
7.95 சதவீதம், 8 சதவீதம், 8.04 சதவீதம் மற்றும் 8.18 சதவீதம் வழங்குகிறது.
ஃபின்கேர் சிறு நிதி வங்கி
அதிகபட்சமாக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 9.01 சதவீதம் வரை மாத வட்டி வழங்குகிறது. சாதாரண மக்களுக்கு 3 சதவீதம் முதல் 8.41 சதவீதம் வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3.60 சதவீதம் முதல் 9.01 சதவீதம் வரையிலும் FD வட்டி விகிதங்களை வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“