Advertisment

ரூ.487 கோடி டீல்; கைமாறிய காமாட்சி இன்டஸ்ட்ரீஸ்; 2000 தொழிலாளர்களின் வேலை தொடருமா?

எதிர்பாராத பொருளாதார நெருக்கடி சூழல் காரணமாக காமாட்சி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.487 கோடிக்கு கைமாறியுள்ளது. இந்நிறுவனத்தில் 2 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர் என்று கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Thiruvallur Kamatchi Industries Company has changed hands for Rs 487 crores

திருவள்ளூரில் இயங்கிவரும் காமாட்சி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் 2 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர் எனக் கூறப்படுகிறது.

ஜெய் கார்ப் நிறுவனத்தின் துணைத் தலைவர் வீரேந்திர ஜெயின் மற்றும் அவரது மகன் அங்கித் ஜெயின் ஆகியோர் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட எஃகு நிறுவனமான காமாச்சி இண்டஸ்ட்ரீஸை ₹487 கோடிக்கு வாங்கியுள்ளதாக காமாச்சி இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

முன்னதாக, ரூ.2,200 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாததால், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனத்தை திவால் நடவடிக்கைக்கு அழைத்துச் சென்றது.
இந்நிலையில், இந்த நிறுவனத்திற்கான தந்தை-மகன் இருவரின் ஏலத்திற்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் சமீபத்தில் அனுமதி வழங்கியது.

வினோத் கோத்தாரியால் முன்னேற்றப்பட்ட கமாச்சி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் சுமார் 2,000 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Business
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment