Advertisment

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை 1.25 வரை உயர்த்திய வங்கி: செக் பண்ணுங்க!

மூத்த குடிமக்கள் 200/400 நாள்கள் சிறப்புத் திட்டத்தின் கீழ் 7.5% வரை கவர்ச்சிகரமான வைப்பு விகிதத்துடன் வட்டி விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகளின் கூடுதல் நன்மையைப் பெறுவார்கள்.

author-image
WebDesk
New Update
The Latest Fixed Deposit Interest Rates

புதிய வட்டி விகிதங்கள் அக்டோபர் 12, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன.

Bank of Maharashtra Fixed Deposits interest rates : பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா (BoM) அதன் நிலையான வைப்பு விகிதங்களை 125 அடிப்படை புள்ளிகள் அல்லது 1.25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. புதிய வட்டி விகிதங்கள் அக்டோபர் 12, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன.

Advertisment

இந்தப் புதிய விகிதங்களின் படி, 46-90 நாள்களுக்கு டெபாசிட் விகிதங்கள் 125 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளன. ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட டெபாசிட்களுக்கு வாடிக்கையாளர்கள் 6.25 சதவீதம் வரை 25 அடிப்படை புள்ளி அதிகரிப்பைப் பெறுவார்கள்.

மூத்த குடிமக்கள் 200/400 நாள்கள் சிறப்புத் திட்டத்தின் கீழ் 7.5% வரை கவர்ச்சிகரமான வைப்பு விகிதத்துடன் வட்டி விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகளின் கூடுதல் நன்மையைப் பெறுவார்கள்.

மகாராஷ்டிரா வங்கியின் சமீபத்திய எஃப்.டி வட்டி விகிதம்

வங்கி 200 நாள் மற்றும் 400 நாள் முதிர்வுகளுடன் இரண்டு சிறப்பு தவணைக்காலங்களை வழங்குகிறது, இதன் கீழ் 7% மற்றும் 6.75% வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.

7 முதல் 30 நாள்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு வங்கி 2.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது, மேலும் 31 முதல் 45 நாள்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 3% வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது.

46 முதல் 90 நாள்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு இப்போது 4.75% வட்டி கிடைக்கும், அதே சமயம் 91 முதல் 119 நாள்களுக்குள் முதிர்ச்சியடைபவைகளுக்கு 4.90% வட்டி கிடைக்கும்.

வங்கி இப்போது 120 முதல் 180 நாள்களுக்குள் முதிர்வு கொண்ட நிலையான வைப்புகளுக்கு 5.10% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மேலும் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா இப்போது 181 முதல் 270 நாள்களுக்குள் முதிர்வு உள்ள வைப்புகளுக்கு 5.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா இப்போது ஒரு வருட காலவரையறை கொண்ட வைப்புகளுக்கு 6.50% வட்டி செலுத்தும்.

அதே நேரத்தில் வங்கி ஒரு வருடம் முதல் 2 ஆண்டுகள் வரையிலான கணக்குகளுக்கு 6.25% வட்டி கிடைக்கும்.

சிறப்பு டெபாசிட்

சிறப்பு வைப்புத்தொகைகளில், பொதுக் குடிமக்களுக்கு 200 நாள்கள் டெபாசிட்களுக்கு 7% மற்றும் 400 நாள்களுக்கு 6.75% வங்கி வழங்குகிறது.

மூத்தக் குடிமக்கள்

91 நாள்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள அனைத்து முதிர்வு திட்டங்களுக்கு 0.50% கூடுதல் விகிதத்தம் கிடைக்கும். இந்திய குடியுரிமை பெறாத டெபாசிட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி பொருந்தாது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment