scorecardresearch

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 8.85 சதவீதம் வட்டி: சீனியர் சிட்டிசன்ஸ் நோட் பண்ணுங்க

உத்கர்ஷ் ஸ்மால் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 8.85 வரை வட்டி கிடைக்கிறது.

HDFC Bank launches 2 special tenure fixed deposit schemes
ஹெச்டிஎஃப்சி புதிய திட்டங்கள் முறையே 35 மற்றும் 55 மாதங்கள் கொண்டவை ஆகும்.

உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை முன்கூட்டியே திரும்பெ பெறும் வசதியுடன் திருத்தியுள்ளது.
புதிய வட்டி விகிதங்கள் மே 22, 2023 முதல் அமலுக்கு வருகின்றன. திருத்தப்பட்ட விகிதங்கள் புதிய நிலையான வைப்புகளுக்கும், ஏற்கனவே உள்ள நிலையான வைப்புகளைப் புதுப்பிப்பதற்கும் பொருந்தும்.

உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வட்டி விகிதங்கள்

7 முதல் 45 நாள்களில் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 4.00% வட்டியும், 46 முதல் 90 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் FDகளுக்கு 4.75% வட்டி விகிதமும் கிடைக்கும்.
தொடர்ந்து, 91 முதல் 180 நாள்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு இப்போது 5.50% வட்டியும், அதே சமயம் 181 முதல் 364 நாள்களுக்குள் முதிர்ச்சியடைபவர்களுக்கு 6.50% வட்டி விகிதம் கிடைக்கும்.

மூத்த குடிமக்கள் FD விகிதங்கள்

வங்கி மூத்த குடிமக்களுக்கு FD வட்டி விகிதங்களை 4.75% முதல் 8.85% வரை வழங்குகிறது. மூத்த குடிமக்கள் தற்போது 1000 முதல் 1500 நாட்களுக்குள் முதிர்வு உள்ள டெபாசிட்டுகளுக்கு அதிகபட்சமாக 8.85% வட்டி விகிதத்தைப் பெறுவார்கள்.

ஆர்.டி. வட்டி

தொடர் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்கள் பொது மக்களுக்கு 6.50% முதல் 8% வரையிலும், மூத்தவர்களுக்கு 7% முதல் 8.50% வரையிலும் இருக்கும்.

இந்த தொடர் வைப்புத்தொகைக்கு குறைந்தபட்ச கால அளவு ஆறு மாதங்கள் மற்றும் அதிகபட்ச காலம் பத்து ஆண்டுகள் வரை இருக்கும்.
தொடர்ச்சியான வைப்புத்தொகை ஒரு மாதத்திற்குள் முன்கூட்டியே மூடப்பட்டால், நுகர்வோருக்கு வட்டி எதுவும் செலுத்தப்படாது மற்றும் அசல் தொகை மட்டுமே திருப்பிச் செலுத்தப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: This bank now offers up to 8 85 fd interest rate for senior citizens