Advertisment

உங்கள் பணம் ‘டபுள்’ ஆகணுமா? போஸ்ட் ஆபிஸின் இந்த திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்!

உங்கள் முதலீடு இரட்டிப்பு ஆக வேண்டுமா? தபால் அலுவலகத்தின் இந்த உத்திரவாதமான திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்

author-image
WebDesk
May 07, 2022 15:21 IST
உங்கள் பணம் ‘டபுள்’ ஆகணுமா? போஸ்ட் ஆபிஸின் இந்த திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்!

This Post Office savings scheme double your know details here: பங்குச் சந்தையின் ரிஸ்க் எடுக்க விரும்பாத, அதேநேரம் பணத்தை இரட்டிப்பாக்க விரும்பினால், உங்களுக்காகவே போஸ்ட் ஆபிஸின் அருமையான திட்டம் உள்ளது. இந்த சிறப்பு திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்ட உங்கள் பணத்திற்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. பாதுகாப்பான முதலீடு மற்றும் இரட்டிப்பு லாபம் வழங்கக்கூடிய அத்தகைய அருமையான திட்டம் தபால் அலுவலகத்தின் சிறு சேமிப்புத் திட்டமான கிசான் விகாஸ் பத்ரா தான்.

Advertisment

அஞ்சல் அலுவலகத்தின் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில், நீங்கள் தனியாகவோ அல்லது மைனர் சார்பாகவோ முதலீடு செய்யலாம். மேலும், இரண்டு பெரியவர்களும் சேர்ந்து கூட்டுக் கணக்கைத் திறக்கலாம். கிசான் விகாஸ் பத்திராவில் முதலீடு குறைந்தது 1000 ரூபாயில் தொடங்க வேண்டும். இதில் முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வரம்பு இல்லை.

தபால் அலுவலகத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, நீங்கள் கிசான் விகாஸ் பத்ரா (கேவிபி) திட்டத்தில் திட்டத்தின் கால அளவு முழுவதும் முதலீடு செய்து இருந்தால், 124 மாதங்களில் உங்கள் பணம் இரட்டிப்பாகும். தபால் அலுவலகத்தில் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் முதலீடு செய்தால் கூட்டு வட்டி கிடைக்கும். தற்போது, ​​இந்தத் திட்டத்தில் முதலீட்டுக்கு 6.9% வட்டி கிடைக்கிறது.

நீங்கள் விரும்பினால், உங்கள் கிசான் விகாஸ் பத்ரா கணக்கை ஒரு தபால் அலுவலக கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு மாற்றலாம். மேலும் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கணக்கு மாற்றப்படலாம். இதில் நாமினி வசதியும் உள்ளது. கிசான் விகாஸ் பத்ராவை நாடு முழுவதும் உள்ள எந்த தபால் நிலையத்திலும் வாங்கலாம்.

இதையும் படியுங்கள்: இனி அலைய வேண்டியதில்லை… புதிய வசதியை அறிமுகம் செய்தது போஸ்ட் ஆபிஸ்

கிசான் விகாஸ் பத்ராவின் முதிர்வு (லாக்-இன்) 30 மாதங்களுக்குப் பிறகு அதாவது கேவிபி சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பணமாக்கப்படலாம். கிசான் விகாஸ் பத்திராவில் முதலீடு செய்யும் போது வரி விலக்கின் பலன் கிடைக்கும். இதில், வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம்.

கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் முதலீடு செய்ய ஒரு கணக்கு தொடங்கப்பட வேண்டும். இதற்கு ஆதார் அட்டை, குடியிருப்புச் சான்று, கேவிபி விண்ணப்பப் படிவம், வயதுச் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மொபைல் எண் ஆகியவை தேவைப்படும். கிசான் விகாஸ் பத்ரா அரசாங்கத்தின் சார்பாக அஞ்சல் அலுவலகம் மூலம் கிடைக்கிறது. கேவிபி சான்றிதழ்களை பணம், காசோலை, ஊதிய உத்தரவு அல்லது டிமாண்ட் டிராஃப்ட் மூலம் வாங்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Post Office Savings Scheme #Business
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment