நீண்ட கால சிறு முதலீட்டுக்கு பாதுகாப்பான ரிட்டன் மற்றும் கவர்ச்சிகரமான வட்டி வழங்குவதில் அஞ்சல முதலீடுகள் சிறந்து காணப்படுகின்றன. இதில், வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), செல்வ மகள் சேமிப்புத் திட்டம் (சுகன்யா சம்ரிதி யோஜனா), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் போன்ற திட்டங்கள் 7 சதவீதத்துக்கும் அதிகமான வட்டியை வழங்குகின்றன.
இதேபோல் கிஷான் விகாஷ் பத்ரா திட்டத்திலும் முதலீட்டாளர்களுக்கு 6.9 சதவீத வட்டி கிடைக்கிறது. இந்தத் திட்டத்தில் 10 ஆண்டுகள் 4 மாதங்களில் (124 மாதங்கள்) பணம் இரட்டிப்பாகும்.
அதாவது இந்தத் திட்டத்தில் இன்று முதலீடு செய்தால் கூட 124 மாதங்களில் பணம் ரூ.2 லட்சமாக பெருகும். இது பல வங்கிகளின் நிலையான வைப்புத் தொகையை விட அதிகமாகும்.
கேவிபி என்ற கிஷான் விகாஷ் பத்ரா கணக்கை ஒருவர் ரூ.1000 டெபாசிட் செய்து திறக்கலாம். பின்னர் 100இன் மடங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். ஒருவர் எத்தனை கணக்குகள் வேண்டுமென்றாலும் உருவாக்கிக் கொள்ளலாம்.
சில குறிப்பிட்ட சூழல்களில் முதலீட்டை முறித்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. மேலும் கேவிபி கணக்கை ஒருவர் பெயரில் இருந்து மற்றொருவர் பெயரில் மாற்றலாம்.
இதேபோல் பல்வேறு திட்டங்கள் அஞ்சலகங்களில் காணப்படுகின்றன. இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதால் உங்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி மற்றும் நிச்சய ரிட்டன் கிடைக்கும்.
இருப்பினும் முதலீட்டாளர்கள் பெருமளவு லாபம் பெற வேண்டும் என்று நினைத்தால் பரஸ்பர நிதிகள் மற்றும் பங்குகளில் முதலீடு செய்யலாம். இதில் இடர்பாடுகள் அதிகம்.
இதில் முதலீடு செய்வது முன்பு இது தொடர்பாக முழு தகவல்களை அறிந்து வைத்திருப்பது அவசியம்.
எந்தப் பங்கில் முதலீடு செய்யலாம், எந்த மியூச்சுவல் பண்ட்கள் லாபமானவை என்பது குறித்த ஆராய்ச்சிகள் அவசியம். கடந்த கால நிதி அறிக்கைகளையும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தலாம். முதலீட்டை பொறுத்தவரை ரிஸ்க் அதிகம் எடுத்தால் அதிக லாபம் பெறலாம். ஆனால் இதில் இடர்பாடுகளும் அதிகம் என்பதை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்வது அவசியம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.