எஸ்பிஐ வங்கியிடம் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்தது இதைத்தான்!

தேவைப்படும் போது உங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளாலாம்.

sbi rules
sbi rules

எந்த வங்கியில் அக்கவுண்ட் வைத்திருந்தாலும் சரி வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் பெரிய கவலை மினிமம் பேலன்ஸ் பற்றிதான். நம்ம பணம்ப்பா.. நமக்கு எப்ப தேவையோ அப்ப முழுசாவோ அல்லது குறிப்பிட்ட தொகையையோ அப்படியே எடுத்துக்கலாம் என்பது தான் பலரின் எண்ணமும்.

எஸ்பிஐ வங்கி புதிய அறிவிப்பு:

ஆனால், வங்கிகளில் கடைப்பிடிக்கப்படும் மினிமம் பேலன்ஸ் கட்டுப்பாடு மூலம் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட தொகையை கண்டிப்பாக அக்கவுண்டில் வைத்திருக்க வேண்டும். ஒருவேளை அதை தவிரனால் வங்கி வசூலிக்கும் அபராதத் தொகையை கட்ட வேண்டும்.

ஆனால் இந்த பிரச்சனையில் இருந்து முடிந்தவரை வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்து நோக்கில் எஸ்பிஐ வங்கி ஜீரோ பேலன்ஸ் வங்கி திட்டத்தில் 5 வகையான திட்டங்களை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த 5 திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான முறையில் திட்டத்தில் பணத்தை சேர்த்துக் கொள்ள முடியும். இதற்கு கட்டணம் ஏதும் இல்லை. அதே போல் தேவைப்படும் போது உங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளாலாம்.

டிஜிட்டல் சேமிப்பு கணக்கு , இன்ஸ்டா சேமிப்பு கணக்கு, சேலரி அக்கவுண்ட், பேசிக் சேமிப்பு கணக்கு, சிறிய டெபாசிட் கணக்குகள் ஆகிய 5 திட்டங்கள் தான் அவை. எஸ்பிஐயில் இதுவரை இருந்து வந்த அறிவிப்பின்படி kyc ஆவணங்களை சமர்பித்தால் மட்டுமே மேற்கண்ட திட்டங்களை வங்கியில் தொடங்க முடியும் என்ற விதிமுறைகள் இருந்து வந்தது.

ஆனால், இனிமேல் kyc ஆவணங்களை சமர்பிக்காமலே வாடிக்கையாளர்களால் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டை தொடர முடியும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதாவது பொதுமக்களுக்கு kyc ஆவணங்களை சமர்பிக்க 1 வருட கால அவகாசம் வழங்கப்படுகிறது.

முதலில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்டை தொடங்கி விட்டு பின்பு kyc ஆவணங்களை சமர்பிக்கலாம். ஒருவேளை 1 வருடம் ஆகியும் உங்களால் kyc ஆவணங்களை வங்கியில் சமர்பிக்க முடியவில்லை என்றால் உங்களது அக்கவுண்ட் உடனடியாக தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வளவு தானே உடனே எஸ்பிஐக்கு புறப்படுங்கள்.. ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் தொடருங்கள் .

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: This zero balance sbi savings account can be opened even without valid documents

Next Story
பிஎஃப் திட்டத்தில் ஒழுங்காக சேமித்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் தெரியுமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com