டிக்டாக் செயலி தடை : பெரும் பாதிப்பை சந்திக்கும் பைட்-டான்ஸ் நிறுவனம்!

இந்த தடை காரணமாக இந்நிறுவனத்தில் பணியாற்றும் இந்தியர்களின் வேலையும் கேள்விக்குறியாகியுள்ளது.   

TikTok ban results Rs 45 crores loss to china says global times

TikTok ban results Rs 45 crores loss to china says global times : இந்திய சீன எல்லையில் பதட்டம் நிலவி வருகின்ற சூழலில் 59 சீன செயலிகளுக்கு தடை விதித்திருந்தது இந்திய அரசு. அதில் ஹெலோ, டிக்டாக் போன்ற புகழ்பெற்ற ஆப்களும் அடங்கும். இந்திய அரசின் உத்தரவை கடைபிடிப்போம் என்று டிக்டாக் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் உலகம் முழுவதும் தலைப்பு செய்திகளாய் மாறியது சீன செயலிகள் தடை.

மேலும் படிக்க : வாழ்க்கையில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்? உலகில் இதைவிட சிறந்த டிப்ஸ் இருக்க முடியாது!

சீன அரசின் அதிகாரப்பூர்வ ஊடகமான குளோபல் டைம்ஸ் இதழில் வெளியான செய்திக் கட்டுரையில் ”இந்திய அரசு விதித்திருக்கும் தடை காரணமாக பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 45 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது. செயலிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் நிறுவனமான சென்சார் டூவர் நிறுவனம் வெளியிட்டிருந்த புள்ளிவிபரப்படி கடந்த மே மாதத்தில் மட்டும் டிக்-டாக் செயலி 11.2 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் பதிவிறக்கம் செய்யப்படுவதைக் காட்டிலும் இந்தியாவில் 2 மடங்கு டிக்-டாக் செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. டிக்டாக் மூலம் வருமானத்தை தரும் நாடுகளில் ஒன்றாக மாறிய இந்தியாவில் பைட்-டான்ஸ் நிறுவனம் சுமார் ரூ. 7437 கோடி முதலீடு செய்துள்ளது. பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு  சீன செயலிகள் தடையால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு, மற்ற நிறுவனங்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை விட பல மடங்கு அதிகம்.  இந்த தடை காரணமாக இந்நிறுவனத்தில் பணியாற்றும் இந்தியர்களின் வேலையும் கேள்விக்குறியாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tiktok ban results rs 45 crores loss to china says global times

Next Story
புதிய ரூ.200 நோட்டுகள் அச்சடிக்கும் பணிகள் தொடக்கம்!RBI, Reserve Bank of India
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express