வெறும் 610 கிரெடிட் ஸ்கோர்... பெர்சனல் லோன் ஈஸியாக வாங்க இத நோட் பண்ணுங்க!

தனிநபர் கடன் இ.எம்.ஐ-கள் மற்றும் கிரெடிட் கார்டு நிலுவை தொகைகளை சரியான நேரத்தில் செலுத்துங்கள். இவற்றை தவறாமல் செலுத்த, ஆட்டோ டெபிட் வசதியை பின்பற்றலாம்.

தனிநபர் கடன் இ.எம்.ஐ-கள் மற்றும் கிரெடிட் கார்டு நிலுவை தொகைகளை சரியான நேரத்தில் செலுத்துங்கள். இவற்றை தவறாமல் செலுத்த, ஆட்டோ டெபிட் வசதியை பின்பற்றலாம்.

author-image
WebDesk
New Update
Credit Score Boosting

கிரெடிட் ஸ்கோர் என்பது நமது நிதி பயன்பாட்டின் முக்கிய குறியீடாகும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும் முன், விண்ணப்பதாரரின் கடன் தகுதியை மதிப்பிட இதை பயன்படுத்துகின்றனர். 610 என்ற கிரெடிட் ஸ்கோர் குறைவானதாக கருதப்படுகிறது. இது புதிய தனிநபர் கடன்கள் அல்லது கிரெடிட் கார்டுகளை பெறுவதற்கு பெரிய தடையாக இல்லை என்றாலும், குறைந்த வட்டி விகித கடன்கள் பெறுவதில் சிக்கலை உருவாக்கும்.

Advertisment

பெரும்பாலான முன்னணி கடன் தகவல் அமைப்புகளின்படி, விண்ணப்பதாரரின் கிரெடிட் ஸ்கோர் 750-க்கு மேல் இருந்தால் தனிநபர் கடன்கள் எளிதாக கிடைக்கும். இது கடன் வழங்கும் நிறுவனங்களால் நம்பகமானதாக கருதப்படுகிறது. இருப்பினும், சில நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் 600 முதல் 650 வரையிலான கிரெடிட் ஸ்கோர் கொண்ட விண்ணப்பங்களையும் கருத்தில் கொள்ளக்கூடும். ஆனால், இத்தகைய கடன்கள் பொதுவாக அதிக வட்டி விகிதங்களுடன் இருக்கும்.

610 கிரெடிட் ஸ்கோர் கொண்டவர்களுக்கு 18-24% வரை வட்டி விகிதங்கள் விதிக்கப்படலாம். அதே நேரத்தில், வலுவான கடன் சுயவிவரம் உள்ளவர்களுக்கு 10-14% வட்டி விகிதத்தில் கடன்கள் கிடைக்கின்றன. 

கடன் ஒப்புதலுக்கு வருமான சுயவிவரத்தின் முக்கியத்துவம்:

Advertisment
Advertisements

கிரெடிட் ஸ்கோர் மட்டுமல்லாமல், வருமான சுயவிவரமும் கடன் ஒப்புதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் தகுதியை மதிப்பிடுவதற்கு ஒரு விரிவான அணுகுமுறையை பின்பற்றுகின்றன. தற்போது, வேலைவாய்ப்பு வகை, வருமான நிலைத்தன்மை, கடன்-வருமான விகிதம் (Debt-to-Income ratio), கடன் பயன்பாட்டு முறை (Credit Utilisation Patterns) மற்றும் ஏற்கனவே உள்ள நிதி நிலுவைகள் போன்ற காரணிகள் கிரெடிட் ஸ்கோருடன் கருத்தில் கொள்ளப்படுகின்றன. இந்த மாற்றம் குறிப்பாக ஃபிண்டெக் கடன் வழங்குநர்களிடையே வெளிப்படையாகத் தெரிகிறது, ஏனெனில் அவர்கள் ஏ.ஐ அடிப்படையிலான மதிப்பீட்டு மாதிரிகளை அதிகம் நம்பியுள்ளனர்.

கடன் தகுதியை மேம்படுத்தும் வழிமுறைகள்:

விண்ணப்பதாரர்கள் தனிநபர் கடன் ஒப்புதல் வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளக் கூடிய சில வழிமுறைகளை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.

1. ஏற்கனவே உள்ள அன்செக்யூர்டு கடன்களை (Unsecured debt) குறைப்பதில் கவனம் செலுத்துங்கள்.

2. உங்களின் கடன் பயன்பாடு 30% க்கும் குறைவாக இருப்பதை உறுதிப்படுத்த முயற்சிக்கவும். அதாவது, உங்கள் கிரெடிட் கார்டு வரம்பில் 30% க்கு மேல் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

3. உங்களின் கடன் அறிக்கையை தொடர்ந்து சரிபார்த்து, ஏதேனும் பிழைகள் இருந்தால் உடனடியாக திருத்தம் செய்யவும்.

4. தனிநபர் கடன் இ.எம்.ஐ-கள் மற்றும் கிரெடிட் கார்டு நிலுவை தொகைகளை சரியான நேரத்தில் செலுத்துங்கள். இவற்றை தவறாமல் செலுத்த, ஆட்டோ டெபிட் வசதியை பின்பற்றலாம். 

எனவே, இது போன்ற வழிமுறைகளை பின்பற்றி உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்தி, குறைவான வட்டி விகிதத்தில் தனிநபர் கடன் பெற முடியும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Loan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: