கிரெடிட் ஸ்கோர் இல்லாமல் பெர்சனல் லோன் வேண்டுமா? இந்த 5 டிப்ஸை நோட் பண்ணுங்க மக்களே

கிரெடிட் ஸ்கோர் இல்லையென்றால் கவலைப்பட தேவையில்லை. கிரெடிட் ஸ்கோர் இல்லாமல் கூட தனிநபர் கடன்களை பெறுவதற்கு பல மாற்று வழிகள் உள்ளன. அவற்றை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.

கிரெடிட் ஸ்கோர் இல்லையென்றால் கவலைப்பட தேவையில்லை. கிரெடிட் ஸ்கோர் இல்லாமல் கூட தனிநபர் கடன்களை பெறுவதற்கு பல மாற்று வழிகள் உள்ளன. அவற்றை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Personal loan

இந்தியாவில், ஒருவரின் கிரெடிட் ஸ்கோர் தான் தனிநபர் கடன்கள் கிடைப்பதையும், அதற்கான வட்டி விகிதத்தையும் பெரும்பாலும் தீர்மானிக்கிறது. நீங்கள் புதிதாக கடன் வாங்குபவராகவோ அல்லது எந்த கடன் வரலாறும் இல்லாதவராகவோ இருந்தால், உங்களுக்கு கடன் வழங்க நிதி நிறுவனங்கள் தயக்கம் காண்பிக்க வாய்ப்பு இருக்கிறது.

Advertisment

ஆனால், இதற்காக நீங்கள் கவலைப்பட தேவையில்லை. கிரெடிட் ஸ்கோர் இல்லாமல் கூட தனிநபர் கடன்களை பெறுவதற்கு பல மாற்று வழிகள் உள்ளன. அவற்றை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.

1. எல்.ஐ.சி பாலிசி மீதான கடன் (Loan against LIC policy):

எல்.ஐ.சி போன்ற ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் சரண்டர் மதிப்புடன் (Surrender Value) இருந்தால், அவற்றை விரைவான தனிநபர் கடன்களை பெறுவதற்கு பிணையமாக (collateral) பயன்படுத்தலாம். இதற்கு கிரெடிட் ஸ்கோர் தேவையில்லை. நீங்கள் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு தவறாமல் பிரீமியம் செலுத்தியிருந்தால், இந்த செயல்முறை எளிதாக இருக்கும். முறையான கடன் வரலாறு இல்லாதவர்களுக்கு இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Advertisment
Advertisements

2. சொத்து மீதான கடன் (Loan against property):

உங்களிடம் குடியிருப்பு சொத்து அல்லது வணிக கட்டடம் இருந்தால், கடன் பெறுவதற்கு கிரெடிட் ஸ்கோர் தேவையில்லை. வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள், சொத்து மீதான கடன்களை (Loans against Property - LAPs) குறைந்த வட்டி விகிதத்தில் வழங்குகின்றன. ஏனெனில், இதில் பிணையம் சம்பந்தப்பட்டுள்ளது. சுயதொழில் செய்பவர்களுக்கும் இது ஒரு நம்பகமான தேர்வாகும். இதன் மூலம் பெரிய கடன் தொகைகளையும், நீண்ட கால திருப்பி செலுத்தும் காலத்தையும் பெறலாம்.

3. ஃபிக்சட் டெபாசிட் அடிப்படையிலான கிரெடிட் கார்டுகள் (FD-backed credit cards):

பெரும்பாலான முன்னணி வங்கிகள், ஃபிக்சட் டெபாசிட் (Fixed Deposit) அடிப்படையிலான கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. கடன் வரலாறு இல்லாதவர்களும் கடன்களை பெறுவதற்கு இது ஒரு நல்ல வழி. நீங்கள் ரூ. 10,000 போன்ற குறைந்த தொகையுடன் டெபாசிட்டை தொடங்கலாம். குறிப்பாக, வருமான ஆதாரம் அல்லது கடன் வரலாற்றை காட்ட வேண்டிய அவசியமில்லை. கிரெடிட் லிமிட்டுக்குள் இருந்து, சரியான நேரத்தில் பணம் செலுத்துவதன் மூலம், உங்கள் கடன் வரலாற்றையும், கிரெடிட் ஸ்கோரையும் படிப்படியாக உருவாக்க இந்த கார்டை பயன்படுத்தலாம்.

4. வாடகை வைப்புத்தொகை கடன்கள் (Rental deposit loans):

நீங்கள் வாடகை வீட்டிற்கு மாறி, பெரிய வைப்புத்தொகையை செலுத்த போதுமான சேமிப்பு இல்லையென்றால், சில கடன் நிறுவனங்கள் வாடகை வைப்புத்தொகை கடன்களை வழங்குகின்றன. இவை அன்செக்யூர்டு லோன்கள் ஆகும். (unsecured loans) இது, நேரடியாக வீட்டு உரிமையாளருக்கு செலுத்தப்படுகிறது.

5. சேமிப்பு கணக்கு மீதான ஓவர்டிராஃப்ட் (Overdraft against savings account):

பல வங்கிகள் மற்றும் கடன் நிறுவனங்கள் சேமிப்பு கணக்குகளில் ஓவர் டிராஃப்ட் வசதிகளை வழங்குகின்றன. இது வாடிக்கையாளர்கள் தங்கள் இருப்பை விட ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை அதிகமாக எடுக்க அனுமதிக்கிறது. இந்த முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் வரம்பிற்கு கிரெடிட் ஸ்கோர் தேவையில்லை. மேலும், இது பெரும்பாலும் வங்கி நிறுவனத்துடனான உங்கள் உறவு, கணக்கு செயல்பாடு மற்றும் கணக்கு வைத்துள்ள காலம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Loan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: