/indian-express-tamil/media/media_files/2025/05/02/cdZ4YTl8212mAl7PvgRs.jpg)
வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு தான் அதனை திருப்பி செலுத்தும் பணி எவ்வளவு சவாலானது என்று தெரியும். வட்டியுடன் சேர்த்து அசல் தொகையையும் செலுத்துவதற்கு பல ஆண்டுகள் ஆகும். அதுமட்டுமின்றி வருமானத்தில் பெரும் தொகை, இந்தக் கடனை செலுத்துவதிலேயே போய் விடும். இந்த சூழலில், வீட்டுக் கடனில் இருந்து சுமார் ரூ. 7 லட்சம் வரை பணத்தை எவ்வாறு சேமிக்கலாம் என்று இந்தக் குறிப்பில் நாம் காணலாம்.
இந்த ஆண்டில் தற்போது வரை ரெப்போ விகிதத்தை இரண்டு முறை ரிசர்வ் வங்கி குறைத்தது. அதாவது, இந்த ஆண்டின் தொடக்கத்திலும், கடந்த ஏப்ரல் மாதத்திலும் முறையே 0.25 சதவீதத்தை குறைத்தது. இதனால், கடன் வழங்கும் வாடிக்கையாளர்களின் வட்டி குறைக்கப்பட்டு, விரைவாக வீட்டுக் கடனை செலுத்த வழிவகுக்கும்.
இதனிடையே, புதிய வருமான வரிச்சட்டத்தின் படி, வீட்டுக் கடனுக்கான வருமான வரி சேமிப்பு வழங்கப்படுவதில்லை. இதன் காரணத்தால், வீட்டுக் கடன் பெற்றவர்கள் அதனை விரைவாக அடைக்கும் வழிகளை தேடுகின்றனர். மேலும், வட்டி குறைந்ததை பயன்படுத்தி, முன்கூட்டியே அசலில் வரவு வைக்க முன் வருகின்றனர்.
இதற்கான வழிமுறைகளை சில எடுத்துக்காட்டுகளுடன் காணலாம். உங்கள் பணியில் இருந்து போனஸ் போன்ற வருமானம் கிடைக்கும் போது, அதனை வீட்டுக் கடனை விரைவாக செலுத்த பயன்படுத்தலாம். இதற்காக நீங்கள் ரீபேமென்ட் செய்யும்போது நிலுவையில் உள்ள கடன் தொகை உடனடியாக குறைக்கப்படும். இதன் பின்னர், நிலுவையில் உள்ள கடனுக்கு மட்டும் தான் வட்டி வசூலிக்கப்படுகிறது. இதனால், வட்டியும் கணிசமான அளவு குறைக்கப்படுகிறது.
அந்த வகையில், நீங்கள் ரூ. 40 லட்சம் கடன் பெற்றிருந்தால், அதற்காக உங்களிடம் வசூலிக்கப்படும் வட்டி விகிதம் 8 சதவீதம் ஆகும். இதனை 20 ஆண்டுகள் நீங்கள் செலுத்த வேண்டும் என்ற நிலை இருப்பதாக கணக்கில் கொள்வோம். உங்களுக்கு எதிர்பாராத வகையில் ரூ. 1 லட்சம் கிடைக்கிறது என்றால், அதனை முன்கூட்டியே வரவு வைக்கலாம். இதன் மூலம் உங்களது கடன் சுமார் 14 மாதங்களுக்கு முன்பாக முடிந்து விடும். இதனடிப்படையில், ரூ. 3.72 லட்சம் வரை வட்டியை நீங்கள் சேமிக்கலாம்.
மேலும், மற்றொரு வழிமுறையும் இருக்கிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஒரு நிலையான தொகையை முன்கூட்டியே செலுத்த முயற்சி செய்யலாம். உதாரணத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 50 ஆயிரத்தை முன்கூட்டியே செலுத்தி வருகிறீர்கள் என்றால், 16 ஆண்டுகளுக்குள் உங்களுடைய கடன் முற்றிலும் முடிந்து விடும். இதில் சுமார் ரூ. 11.11 லட்சம் வட்டி வரை நீங்கள் சேமிக்க முடியும்.
மேலும், ஈ.எம்.ஐ தொகையை அதிகரிப்பதன் மூலமும் உங்கள் வட்டியை ரூ. 2.37 லட்சம் வரை சேமிக்கலாம். அதாவது, ரூ. 40 லட்சம் கடனுக்கான 8 சதவீத வட்டிக்கு ஈ.எம்.ஐ தொகையை ரூ. 722 அதிகரிப்பதன் மூலம் இதனை செய்யலாம். இது போன்ற வழிமுறைகளை பின்பற்றி வட்டியை சேமிக்க முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.