/tamil-ie/media/media_files/uploads/2022/07/jaggery-2-unsplash-1.jpg)
ஆயிரக்கணக்கான பனை மரங்கள் அழியும் தருவாயில் உள்ளன. அவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Tiruchendur Udankudi Karupatti Jaggery : திருச்செந்தூர் உடன்குடி கருப்பட்டிக்கு புவி சார் குறியீடு வழங்கப்பட்ட நிலையில், உடன்குடி மக்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள். உலகப் புகழ்பெற்ற உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்கி அரசு பெருமை சேர்த்து உள்ளது.
உடன்குடி மற்றும் அதைச் சுற்றி உள்ள 7 கிராமங்களில் சுமார் 6 ஆயிரம் குடும்பங்கள் பனை விவசாயத்தை நம்பி வாழ்கின்றன. இவர்கள், தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில், ஆயிரக்கணக்கான பனை மரங்கள் அழியும் தருவாயில் உள்ளன. அவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
புவியியல் சார்ந்த குறியீடு (ஜிஐ) என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடத்தை ஒத்திருக்கும் சில தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் பெயர் ஆகும்.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட பயனர்களாக பதிவுசெய்யப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் பிரபலமான தயாரிப்பு பெயரைப் பயன்படுத்த அனுமதியில்லை என்பதை ஜிஐ குறிச்சொல் உறுதி செய்கிறது.
தமிழ்நாட்டில் சேலம் சுங்கடி, காஞ்சி பட்டு, பவானி ஜமக்காளம், மதுரை சுங்குடி சேலை, கோயம்புத்தூர் ஈர மாவு அரவைப் பொறி, தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் ஓவியத்தட்டு, நாச்சியார் கோவில் விளக்கு உள்ளிட்ட பல்வேறு பொருள்களுக்கு இந்தப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
உணவுப் பொருள்களை பொறுத்தமட்டில் மைசூரு பாகு, ஹைதராபாத் கலீம், செட்டிநாடு கொட்டான் உள்ளிட்ட பல்வேறு பொருள்களுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.