scorecardresearch

வீடு, மனை விற்பனை கண்காட்சி: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னையில் ‘பேர்புரோ’ என்ற தலைப்பில் நடைபெறும் வீடு, மனை விற்பனை கண்காட்சியில், 70க்கும் மேற்பட்ட கட்டுமான திட்டங்கள் காட்சிப்படுத்தப்படுகிறது.

வீடு, மனை விற்பனை கண்காட்சி: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை வர்த்தக மையத்தில் வீடு, மனை விற்பனை கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னையில் ‘பேர்புரோ’ என்ற தலைப்பில் நடைபெறும் வீடு, மனை விற்பனை கண்காட்சியில், 70க்கும் மேற்பட்ட கட்டுமான திட்டங்கள் காட்சிப்படுத்தப்படுகிறது.

இந்த கண்காட்சியில், ரூ.15 லட்சம் முதல் ரூ.10 கோடி வரை வீடுகள், மனைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. வீடு, மனை வாங்குவோருக்கு உடனடி கடன் ஒப்புதல் வழங்க, 6 வங்கிகள் சிறப்பு அரங்குகள் அமைக்கப்படுகிறது.

அப்போது அந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, “அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியே திராவிட மாடல் ஆட்சி ஆகும். தொழில் நிறுவனங்களை வரவேற்கும் வகையில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகிறது.

எல்லோருக்குமான வளர்ச்சி என்பதே தமிழக அரசின் நோக்கம் ஆகும். குடிசையில்லா நகரங்களை உருவாக்க குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கியவர் கருணாநிதி. பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்வதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 49% மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து வருகின்றனர். நகரமயமாதலில் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக உள்ளது. வரும் ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். மனைப்பிரிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க ஒற்றை சாளர முறை செயல்பாட்டில் உள்ளது”, என்றார்.

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Tn cm mk stalin inaugurated new house and plot sales exhibition fairpro

Best of Express