செவ்வாய்க்கிழமை 2024-25 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தின் பிற முறையான துறைகளில் வேலைவாய்ப்பைத் தூண்டும் முயற்சியில், வேலைவாய்ப்பு தொடர்பான மூன்று ஊக்கத் திட்டங்களை நிதியமைச்சர் நிரமலா சீதாராமன் அறிவித்தார். நிர்மலா சீதாராமனின் கூற்றுப்படி, பிரதமரின் பட்ஜெட் தொகுப்பின் ஒரு பகுதியாக அரசாங்கம் மூன்று திட்டங்களை செயல்படுத்தும்.
இந்த திட்டங்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) சேருவதை அடிப்படையாகக் கொண்டவை, மேலும் முதல் முறையாக வேலைக்கு வரும் பணியாளர்களை அங்கீகரிக்கும் மற்றும் ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதில் கவனம் செலுத்தும் என்று நிதி அமைச்சர் கூறினார்.
நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையின்படி, வேலைவாய்ப்பு தொடர்பான மூன்று ஊக்கத் திட்டங்கள் தொடர்பான விவரங்கள் பின்வருமாறு:
திட்டம் 1: முதல் முறை பணியாளர்கள்
அனைத்து முறையான துறைகளிலும் முதல்முறையாக பணிக்குச் சேரும் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும். இ.பி.எப்.ஓ.,வில் பதிவு செய்த முதல் முறையாக பணிபுரியும் ஊழியர்களுக்கு மூன்று தவணைகளில் ஒரு மாத சம்பளம் நேரடி பணப்பலன் பரிமாற்றம் மூலம் வழங்கப்படும். இந்தப் பரிமாற்றம் ரூ.15,000 வரை இருக்கும். தகுதி வரம்பு மாதத்திற்கு ரூ.1 லட்சமாக இருக்கும். இத்திட்டத்தின் மூலம் 210 லட்சம் இளைஞர்கள் பயனடைவார்கள்.
திட்டம் 2: உற்பத்தி துறையில் வேலை வாய்ப்பு உருவாக்கம்
முதல் முறை பணியாளர்களின் வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட திட்டம், உற்பத்தித் துறையில் கூடுதல் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் திட்டமாகும். வேலையின் முதல் நான்கு ஆண்டுகளில் இ.பி.எஃப்.ஓ பங்களிப்பைப் பொறுத்து, பணியாளர் மற்றும் நிறுவனத்திற்கு நேரடியாக குறிப்பிட்ட அளவில் ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் மற்றும் அவர்களது நிறுவனங்கள் பயனடைவார்கள்.
திட்டம் 3: நிறுவனங்களுக்கு ஆதரவு
நிறுவனங்களை மையமாகக் கொண்ட இந்தத் திட்டம் அனைத்துத் துறைகளிலும் கூடுதல் வேலைவாய்ப்பை உள்ளடக்கும். மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் உள்ள அனைத்து கூடுதல் வேலைவாய்ப்புகளும் கணக்கிடப்படும். ஒவ்வொரு கூடுதல் பணியாளருக்கும் இ.பி.எஃப்.ஓ பங்களிப்பிற்காக அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு மாதத்திற்கு ரூ 3,000 வரை நிறுவனங்களுக்கு திருப்பிச் செலுத்தும். இத்திட்டம் 50 லட்சம் பேருக்கு கூடுதல் வேலைவாய்ப்பை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.