சென்னையில் 22 கிராம் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாள்களாக அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் ஜூலை 24ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில் சவரனுக்கு ரூ.1203 அதிகரித்துள்ளது.
தற்போது சென்னையில் ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் ரூ.4820 ஆக நிர்ணயிக்கப்பட்டு ஒரு சவரன் ரூ.38560 ஆக உள்ளது. 24 காரட் தூயத் தங்கத்தை பொருத்தவரை கிராம் ரூ.5222 ஆக நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.41776 ஆக உள்ளது.
ஜூலை 24ஆம் தேதி 24 காரட் ஒரு கிராம் ரூ.5098 ஆகவும், சரவன் ரூ.40784 ஆகவும் இருந்தது. அதுவே ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4696 ஆகவும், சவரன் ரூ.37768 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 9 நாள்களில் தங்கம் சவரனுக்கு ரூ.1203 அதிகரித்துள்ளது.
நாட்டின் முக்கிய நகரங்களில் சரக்கு சேவை வரி மற்றும் இதர வரிகள் நீங்கலாக 10 கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையை காணலாம்.
1) டெல்லி ரூ. 47,240
2) மும்பை ரூ.47,090
3) கொல்கத்தா ரூ.47,090
4) பெங்களுரு ரூ.47,140
5) ஹைதராபாத் ரூ.47,090
6) திருவனந்தபுரம் ரூ.47,090
7) அகமதாபாத் ரூ.47,140
8) ஜெய்ப்பூர் ரூ.47240
9) லக்னோ ரூ.47240
10) பாட்னா ரூ.47240
11) சண்டிகர் ரூ.47240
12) புவனேஸ்வர் ரூ.47,090
வெள்ளி விலை
வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து கிலோ ரு.63,600 ஆக உள்ளது. திங்கள்கிழமை (ஆக.1) வெள்ளி கிராம் ரூ.63.30 ஆக காணப்பட்டது.
வெள்ளி அதிகப்பட்சமாக ஜூலை 27ஆம் தேதி கிராம் ரூ.60 ஆக குறைந்தது. அந்த வகையில் கடந்த 5 தினங்களில் வெள்ளி கிலோவுக்கு ரூ.3,600 கூடியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
ஜூலை மாதத்தைப் போல் இன்றும் பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் ரூ.102.63 ஆக உள்ளது. டீசல் விலையும் மாற்றமின்றி ரூ.94.24க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை மாநில வரிகள், இதர போக்குவரத்து செலவினங்கள் காரணமாக இடத்துக்கு இடம் சற்று மாறுபடும். உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றமும் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கத்தை கொடுத்துவருகிறது.
இதற்கிடையில் இந்தியா போன்ற நாடுகளில் தங்கத்தில் முதலீடு செய்வதும் அதிகரித்துவருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“