நடப்பாண்டில் தங்கத்தின் விலை பெரிதளவு அதிகரிக்காவிட்டாலும் சீரான இடைவெளியில் வளர்ச்சி கண்டுவருகிறது. இதனால், தங்கத்தை பொருளாக வாங்காமல் தங்கப் பத்திரத்தில் நீண்ட காலத்தில் முதலீடு செய்வதும் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வாரங்களில் தங்கத்தின் விலை சற்று சரிவை சந்தித்து காணப்பட்டது. இதன் நீட்சியாக நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (ஜூலை19) 22 காரட் ஆபரணத் தங்கம் சென்னையில் ரூ.30 குறைந்து காணப்பட்டது.
வெள்ளியும் கிராமுக்கு ரூ.1 குறைந்து, கிலோவுக்கு ஆயிரம் வரை சரிந்தது. இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.9 அதிகரித்து ஒரு சவரன் (8 கிராம்) ரூ.37,336ஆக உள்ளது.
24 காரட் தூயத் தங்கத்தை பொருத்தமட்டில் கிராம் ரூ.5069 ஆக நிர்ணயிக்கப்பட்டு ரூ.40552 ஆக விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி கிராமுக்கு 30 பைசா அதிகரிக்கப்பட்டு கிராம் ரூ.61 ஆகவும், கிலோ பார் வெள்ளி ரூ.61 ஆயிரமாகவும் காணப்படுகிறது. பெட்ரோல் விலையில் மாற்றமில்லை. லிட்டருக்கு ரூ.102.63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டீசல் விலையிலும் மாற்றம் இன்றி லிட்டருக்கு ரூ.94.24 என விற்பனையாகிறது.
மாநில வரி, போக்குவரத்து செலவினங்கள் காரணமாக தங்கம் விலை மாநிலத்துக்கு மாநிலம் இடத்துக்கு இடம் சற்று மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.