சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.38 அதிகரித்து விற்பனையாகிறது.
சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் நேற்று ரூ.4767க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று அதிரடியாக ரூ.38 அதிகரித்து தற்போது ரூ.4805க்கு விற்பனையாகிறது. சவரன் ரூ.38440 ஆக உள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு தங்கம் சவரன் ரூ.37880 ஆக இருந்தது. 24 காரட் தூயத் தங்கம் கிராம் ரூ.5207 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.41656 என உள்ளது.
தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்து. ஜூலை 27ஆம் தேதி ரூ.60க்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி ரூ.62.80க்கு இன்று விற்பனையாகிறது.
கடந்த இரு தினங்களில் வெள்ளி கிராமுக்கு ரூ.2.80 காசுகள் உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ வெள்ளி ரூ.62300 ஆக உள்ளது. பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனையாகிறது.
நாட்டின் மற்ற நகரங்களில் சரக்கு சேவை வரி நீங்கலாக 10 கிராம் தங்கத்தின் விலையை காணலாம்.
1) டெல்லி ரூ.46450
2) மும்பை ரூ. 46450
3) கொல்கத்தா ரூ. 46450
4) பெங்களுரு ரூ. 46450
5) ஹைதராபாத் ரூ. 46450
6) திருவனந்தபுரம் ரூ. 46450
7) அகமதாபாத் ரூ.46480
8) ஜெய்ப்பூர் ரூ. 46600
9) லக்னோ ரூ. 46600
10) பாட்னா ரூ. 46460
11) சண்டிகர் ரூ. 46600
12) புவனேஸ்வர் ரூ.46450
தங்கம் மற்றும் வெள்ளி போக்குவரத்து செலவினங்கள், மாநில வரிகள், இதர செலவினங்கள் காரணமாக ஒவ்வொரு மாநிலத்துக்கு மாநிலம் சற்று வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.