/tamil-ie/media/media_files/uploads/2023/07/tamil-indian-express-2023-07-26T125925.631.jpg)
சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு, ரூ.480 குறைந்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் தங்கம் , வெள்ளி இறக்குமதி வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக குறைக்கப்பட்டதால், கடந்த 3 நாட்களில் மட்டுமே ஒரு சவரனுக்கு ரூ.3,160 குறைந்துள்ளது.
இந்நிலையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமிற்கு ரூ.60 குறைந்து ரூ.6,430-க்கும் சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51, 440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இது போன்று 18 காரட் தங்கம் விலை ரூ.49 குறைந்து ஒரு கிராம் ரூ.5,267-க்கும் சவரனுக்கு ரூ.392 குறைந்து ஒரு சவரன் ரூ.42, 136 விற்பனை செய்யப்படுகிறது.
இதுபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.89-க்கும் ஒரு கிலோ ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us