Advertisment

திடீரென குறைந்த தங்கம் விலை : எவ்வளவு தெரியுமா?

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. ரூ.55 ஆயிரத்தை கடந்து பலருக்கு தங்கத்தின் விலை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisment

கடந்த மே 10ம் தேதி அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்தது.

இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது ரூ.53,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 25 குறைந்து 6,725-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.90-க்கும் ஒரு கிலோ 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment