சென்னையில் ஆப்ரணத் தங்கத்தின் விலை ஒரு பவனுக்கு ரூ.320 அதிகரித்து இன்று விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.54,600 விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஒரு கிராம் ரூ.6,825 விற்பனையாகிறது.
இதுபோன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.33 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,591-க்கும் சவரனுக்கு ரூ.264 ஒரு சவரன் ரூ.44,728 விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.100-க்கும் ஒரு கிலோ ரூ.1 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“