சர்வதேச நிலவரங்களால், இம்மாத துவக்கத்தில் இருந்து, தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது.
மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் தங்கம் விலை ரூ.70 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தங்கம் விலை (மே 23) அன்று சவரனுக்கு ரூ.280 குறைந்தது. கடந்த மாதம் 22-ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.74,320-க்கு விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய உச்சமாகும்.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்துவருகிறது. இந்நிலையில், கடந்த 21ம் தேதி தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,440-க்கு விற்றது. மே 22-ம் தேதி தங்கம் விலை மேலும் உயர்வை சந்தித்தது.
அதைத் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் சவரன் ரூ.71,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது மற்றும் கிராம் ரூ.8, 950-க்கு விற்பனை செய்யபடுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.