scorecardresearch

Today Gold, Silver Rate: சென்னையில் குறைந்த தங்கம் விலை; மற்ற நகரங்களில் என்ன ரேட்?

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 636 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் கிராம் ரூ.4 ஆயிரத்து 676 ஆக இருந்தது.

Gold Price Today, 03 September 2022
இன்று 03 செப்டம்பர் தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் தங்கம் இன்று (ஜூலை 15) விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லி, கொல்கத்தா தங்கம் விலை:-

இந்திய தலைநகர் டெல்லியில் 22 காரட் 10 கிராம் தங்கம் ரூ.46,900க்கு விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.50,950 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவை பொருத்தமட்டில் கிராமுக்கு ரூ.200 உயர்ந்து, 22 காரட் ஆபரணத் தங்கம் 10 கிராம் ரூ.46,900 ஆகவும், 24 காரட் தூயத் தங்கம் 10 கிராம் ரூ.51 ஆயிரத்து 160 ஆகவும் உள்ளது.
வெள்ளியை பொருத்தவரை கொல்கத்தா, டெல்லி மற்றும் மும்பையில் ரூ.57 ஆயிரமாகவும், சென்னையில் ரூ.62 ஆயிரத்து 300 ஆகவும் உள்ளது.

சென்னையில் தங்கம், வெள்ளி விலை:
சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 636 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் கிராம் ரூ.4 ஆயிரத்து 676 ஆக இருந்தது. ஆக இன்று கிராமுக்கு ரூ.40 குறைந்துள்ளது.
அதேபோல் 24 காரட் தங்கம் கிராமுக்கு 5,058 என நிர்ணயிக்கப்பட்டு 10 கிராம் ரூ.50 ஆயிரத்து 580 என உள்ளது.
சென்னையில் நேற்றைய தினம் 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.46,760 ஆகவும், 24 காரட் தூயத் தங்கம் சவரனுக்கு ரூ.51,010 ஆகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச காரணிகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக தங்கம் விலைளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. சரக்கு சேவை வரி மற்றும் போக்குவரத்து செலவினங்கள் ஆகியவை காரணமாக தங்கத்தின் விலையில் இடத்துக்கு இடம் மாறுபாடு காணப்படுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Today gold rate in chennai

Best of Express