தங்கத்தின் விலை இன்று (புதன்கிழமை) உயர்ந்து காணப்படுகிறது. வெள்ளி விலை கிட்டத்தட்ட 0.39 சதவீதம் வரை உயர்வை கண்டுள்ளது.
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், தங்கம் ஆகஸ்ட் ஃப்யூச்சர்ஸ் 10 கிராமுக்கு ரூ. 58,860 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ரூ.87 அல்லது 0.15 சதவீதம் உயர்வாகும்.
அதேநேரம், வெள்ளி செப்டம்பர் ஃபியூச்சர்ஸ் 276 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோவுக்கு 71,393 ரூபாய்க்கு MCX இல் வர்த்தகம் செய்யப்பட்டது.
சென்னையை பொறுத்தமட்டில் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.5500 என நிர்ணயிக்கப்பட்டு 8 கிராம் ரூ.44 ஆயிரமாக உள்ளது.
24 காரட் தூயத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.5959 என நிர்ணயிக்கப்பட்டு ரூ.47672 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இது கிராமுக்கு ரூ.18 அதிகமாகும்.
அதேநேரத்தில் வெள்ளி கிலோ ரூ.100 குறைந்து ரூ.70 ஆயிரமாக உள்ளது. தற்போது கிராம் வெள்ளி 77 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த வாரத்தில் வெள்ளி கிராம் ரூ.75.50 வரை சரிந்து விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“