/tamil-ie/media/media_files/uploads/2022/07/tamil-indian-express-78.jpg)
Tamil news updates
மதிப்புமிக்க மஞ்சள் உலோகமான தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.
அமெரிக்க வங்கிகளில் வட்டி உயர்வு, பணவீக்கம் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி என தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக சிறிது சிறிதாக சரிந்துவருகிறது.
இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்தது. அதேபோல் 24 காரட் தூயத் தங்கமும் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து விற்பனை ஆகிவருகிறது.
வெள்ளியை பொருத்தமட்டில் கிராம் ரூ.61.30 என நிர்ணயிக்கப்பட்டு கிலோ ரூ.61,300 என விற்பனையாகிவருகிறது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4647 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.37,176 ஆக உள்ளது. 24 காரட் தங்கம் கிராம் ரூ.5049 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் (8 கிராம்) ரூ.40,392 என உள்ளது.
நாட்டின் மற்ற நகரங்களான டெல்லி, பாட்னா, லக்னோ, கொல்கத்தா மற்றும் கேரளத்தில் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை குறித்து பார்க்கலாம்.
மும்பை - ரூ.46,500
டெல்லி – ரூ.46,500
கொல்கத்தா – ரூ.46,500
பெங்களுரு – ரூ.46,580
ஹைதராபாத் - ரூ. 46,500
கேரளா - ரூ.46,500
அகமதாபாத் - ரூ.46,540
ஜெய்ப்பூர் - ரூ.47,050
லக்னோ - ரூ.46,650
பாட்னா - ரூ.46,530
சண்டிகர் - ரூ.47,650
புவனேஸ்வர் - ரூ.46,500
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.