சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.36 வரை உயர்ந்து விற்பனையாகிவருகிறது. எனினும் நேற்று முன்தினத்துடன் (ஜூலை 20) ஒப்பிடுகையில் விலை ரூ.1 குறைந்தே காணப்படுகிறது.
சென்னையை பொருத்தவரை வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.4666 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.37328 என விற்கப்படுகிறது.
24 காரட் தூயத் தங்கம் கிராம் ரூ.5068 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.40544 என உள்ளது. நேற்று, ஆபரணத் தங்கம் சவரன் ரூ.37328 எனவும், 24 காரட் தங்கம் சவரன் ரூ.40256 எனவும் இருந்தது. ஆக இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.288 உயர்ந்துள்ளது.
வெள்ளி கிராமுக்கு 61.60 என நிர்ணயிக்கப்பட்டு கிலோ பார் வெள்ளி ரூ.61600 ஆக உள்ளது. கடந்த 15ஆம் தேதி வெள்ளி அதிகப்பட்சமாக கிராம் ரூ.62.30 காசுகளாக உயர்ந்தது. பின்னர் படிபடியாக குறைந்து தற்போது ரூ.61.60 காசுகளாக உள்ளது.
இந்த வாரத்தில் வெள்ளி அதிகப்பட்சமாக ரூ.60.70 காசுகளாக குறைந்து விற்பனையானது. தங்கம் வெள்ளி விலையை பொருத்தமட்டில் மாநில அரசு வரி, போக்குவரத்து செலவினங்கள் காரணமாக விலை இடத்துக்கு இடம் சற்று மாறுபடும்.
நாட்டின் மற்ற நகரங்களில் 22 காரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையை பார்க்கலாம்.
1) அகமதாபாத் ரூ.46050
2) பெங்களுரு ரூ.46070
3) போபால் ரூ. 47850
4) புவனேஸ்வர் (ஒடிசா) ரூ.46000
5) டெல்லி ரூ.46000
6) திருவனந்தபுரம் ரூ.46000
7) மும்பை 46000
8) விசாகப்பட்டினம் ரூ.46000