இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர்ப்பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைகிறது. அந்த வகையில், கடந்த 14-ந் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.9,320-ம், சவரனுக்கு ரூ.74,560 என விற்பனையானது. அதன் பின்னர் 21-ந் தேதி முதல் தங்கம் விலை சரிவையே சந்தித்து வந்தது.
இந்தச் சூழலில், நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்திருந்தது. இதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.9,065-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.72,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும் ஏற்றத்தை கண்டுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ரூ.72,840-க்கும், ஒரு கிராம் ரூ.9,105-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
03.07.2025 - ஒரு சவரன் ரூ. 72,840 (இன்று)
02.07.2025 - ஒரு சவரன் ரூ. 72,520 (நேற்று)
01.07.2025 - ஒரு சவரன் ரூ. 72,160
30.06.2025- ஒரு சவரன் ரூ. 71,320
29.06.2025- ஒரு சவரன் ரூ. 71,440
28.06.2025- ஒரு சவரன் ரூ. 71,440