scorecardresearch

உச்சத்தில் தங்கம், வெள்ளி.. புதிய விலையை செக் பண்ணுங்க

மஞ்சள் உலோகம் கிராமுக்கு ரூ.70 அதிகரிப்பை சந்தித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 1.40 காசுகள் அதிகரித்துள்ளது.

gold
Today Gold rate in Chennai March 23

சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, ரூ.43,760 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

இன்று (மார்ச் 23) காலை நிலவரப்படி சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ 44, 320க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.5,540 க்கு விற்பனையாகிறது.

24 காரட் தூயத் தங்கம் கிராம் ரூ.6071 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.48568 என உள்ளது. கடந்த காலங்களில் ஒரு சவரன் தங்கம் ரூ.45 ஆயிரம் வரை விலை உயர்ந்து காணப்பட்டது. ஆக இது அதைவிட உயர்வாகும்.

வெள்ளி

கடந்த சில நாள்களாக உச்சத்தில் இருந்த வெள்ளி விலையும் நேற்று கிராமுக்கு 70 காசுகள் வீதம் சரிவை சந்தித்தது. ஆனால் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.40 உயர்ந்து ரூ.75.40க்கு விற்பனையாகிறது. கிலோ பார் வெள்ளி 75,400 ஆயிரமாக உள்ளது.

மார்ச் மாத தொடக்கத்தில் வெள்ளி கிராம் 67.30 காசுகள் வரை சரிந்தது. அதன் பின்னர் தொடர் உயர்வை கண்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Today gold rate march 23 chennai gold rate