சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.8 அதிகரித்து விற்பனையாகிவருகிறது. கடந்த 17ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில் தங்கம் கிராமுக்கு ரூ.101 அதிகரித்துள்ளது.
அந்த வகையில், சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4728 ஆகவும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.372824 ஆகவும் விற்பனையாகிறது. 24 காரட் தூயத் தங்கம் கிராம் ரூ.5130 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு சவரன் ரூ.41040 ஆக உளளது.
வெள்ளி நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் 30 காசுகள் குறைந்து கிராம் ரூ.60.80 ஆக நிர்ணயிக்கப்பட்டு கிலோ வெள்ளி ரூ.60,800 ஆக இருந்தது. வெள்ளி விலையை பொறுத்தவரை ஜூலை 17ஆம் தேதி கிராம் ரூ.61.70 காசுகளாக இருந்தது.
தற்போது ரூ.61.80 காசுகளாக உள்ளது. ஆக 10 காசுகள் மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால் தங்கம் விலை ஜூலை 17ஆம் தேதியோடு ஒப்பிடுகையில் கிராமுக்கு ரூ.101 அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இன்று டெல்லியில் 10 கிராம் 24 காரட் தங்கம் ரூ.51230 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் ரூ.46960 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மற்ற நகரங்களில் இன்றைய (ஜூலை 26) தங்கத்தின் விலையை பார்க்கலாம். (10 கிராம் அளவு, ஜிஎஸ்டி மற்றும் இதர வரிகள் நீங்கலாக)
1) மும்பை ரூ. 46,900
2) கொல்கத்தா ரூ. 46,900
3) பெங்களுரு ரூ. 46,950
4) ஹைதராபாத் ரூ. 46,900
5) திருவனந்தபுரம் ரூ.46,900
6) அகமதாபாத் ரூ. 46,940
7) ஜெயப்பூர் ரூ. 47,050
8) லக்னோ ரூ. 47,050
9) பாட்னா ரூ. 46,930
10) சண்டிகர் ரூ. 47,050
11) புவனேஸ்வர் ரூ. 46,900
சர்வதேச சந்தை நிலவரம் காரணமாக தங்கம் விலை கடந்த வாரங்களாக குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது கடந்த 10 நாள்களில் மட்டும் கிராமுக்கு ரூ.100க்கும் மேல் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை சரக்கு சேவை வரி, மாநில வரி மற்றும் போக்குவரத்து செலவிகனங்கள் காரணமாக இடத்துக்கு இடம் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil