கிலோ வெள்ளி ரூ.400 குறைந்த நிலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.16 அதிகரித்து விற்பனையாகிறது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4696 என நிர்ணயிக்கப்பட்டு, சவரன் ரூ.37568 என விற்பனையாகிறது. 24 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.5098 ஆக நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.40784 ஆக உள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக வெள்ளி கிராமுக்கு 40 பைசா குறைந்து கிலோ ரூ.400 சரிந்து ரூ.61200 என விற்கப்படுகிறது. நேற்று கிராம் வெள்ளி ரூ.60.60 காசுகளாக இருந்தது.
நாட்டின் மற்ற நகரங்களில் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை குறித்து பார்க்கலாம்.
மும்பை ரூ.46400
டெல்லி ரூ.46400
கொல்கத்தா ரூ.46400
பெங்களுரு ரூ.46450
ஹைதராபாத் ரூ.46400
திருவனந்தபுரம் ரூ.46400
அகமதாபாத் ரூ.46400
ஜெய்ப்பூர் ரூ.46550
லக்னோ ரூ.46550
பாட்னா ரூ.46420
சண்டிகர் ரூ.46550
புவனேஸ்வர் ரூ.46450
உலகளாவிய சந்தையின் விலை அதிகரித்ததையடுத்து இந்திய சந்தைகளிலும் தங்கத்தின் விலை சற்று கூடியுள்ளது. கடந்த வாரம் தங்கம் சற்று சரிந்திருந்த நிலையில், தற்போது விலை அதிகரித்து காணப்படுகிறது.