திங்கள்கிழமை (செப்.26) வர்த்தகத்தை இந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சியுடன் நிறைவு செய்தன.
மும்பை பங்குச் சந்தை பி.எஸ்.இ., குறியீட்டெண் 953.7 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. தேசிய பங்குச் சந்தை என்.எஸ்.இ., நிஃப்டி 311.05 புள்ளிகள் சரிந்து வர்த்தகத்தை நிறைவு செய்தது.
நிஃப்டி
50 பங்குகள் பட்டியலிடப்பட்ட தேசிய பங்குச் சந்தையில் ஏசியன் பெயிண்ட்ஸ், திவிஸ் லேப், ஹெச்.சி.எல்., டெக், இன்ஃபோசிஸ், டி.சி.எஸ்., அல்ட்ரா டெக் சிமெண்ட், விப்ரோ உள்ளிட்ட 7 நிறுவன பங்குகள் மட்டுமே லாபத்தில் வணிகத்தை நிறைவு செய்தன.
மீதமுள்ள 43 பங்குகள் நஷ்டத்தில் வணிகத்தை நிறைவு செய்தன. குறிப்பாக வங்கி பங்குகள் அதிக சரிவை கண்டன.
அதிகப்பட்சமாக அதானி, மாருதி சுசூகி பங்குகள் 5% வரை சரிவுற்றன.
தொடர்ந்து ஐ.சி.ஐ.சி.ஐ., பங்குகள் ரூ.21.2ம், கோடக் மஹிந்திரா பங்குகள் ரூ.33.7ம், எஸ்.பி.ஐ., ரூ.7.30ம் சரிந்தன.
மும்பை பங்குச் சந்தை
20 பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தையில் ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்.சி.எல்., டெக், இன்ஃபோசிஸ், டி.சி.எஸ்., அல்ட்ரா டெக் சிமெண்ட், விப்ரோ உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தில் இயங்கின.
ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டிஸ் லேப், ஹெச்.டி.எப்.சி., ஹெச்.டி.எப்.சி., வங்கி, இந்துஸ்தான் யூனிலிவர், ஐ.சி.ஐ.சி.ஐ., இண்டஸ்இந்த் வங்கி, ஐ.டி.சி., கோட்டாக் மகிந்திரா வங்கி, லார்சன் அண்ட் டர்போ, மகிந்திரா அண்ட் மகிந்திரா, மாருதி சுசூகி, நெஸ்லே, என்.டி.பி.சி., பவர் கிரிட் கார்ப், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எஸ்.பி.ஐ., சன் பார்மா, டாடா ஸ்டீல்,டெக் மகிந்திரா, டைடன் கோ பங்குகள் சரிவை கண்டன.
இதில் அதிகப்பட்சமாக மாருதி சுசூகி 5 சதவீதம் சரிவை கண்டு (ஒரு பங்கிற்கு ரூ.513.3), ரூ.8830.60 ஆக காணப்படுகிறது. அதற்கு அடுத்தப்படியாக டாடா ஸ்டீல் 4 சதவீதம் சரிந்தது.
உலகளாவிய சந்தைகளில் ஏற்பட்ட தாக்கம், ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை கூட்டம் உள்ளிட்டவை காரணமாக இன்று பங்குச் சந்தையில் வீழ்ச்சியுடன் காணப்பட்டன.
பங்குச் சந்தை நிலவரம்
தற்போது, மும்பை பங்குச் சந்தை பி.எஸ்.இ., குறியீட்டெண் 953.7 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 57145.22 எனவும், தேசிய பங்குச் சந்தை என்.எஸ்.இ., நிஃப்டி 311.05 புள்ளிகள் சரிந்து 17016.30 எனவும் காணப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.