scorecardresearch

ஏர்டெல் பங்குகள் 3 சதவீதம் சரிவு.. தப்பித்த சன் பார்மா, ஐ.டி.சி., பங்குகள்

புதன்கிழமை வர்த்தகத்தை பங்குச் சந்தைகள் வீழ்ச்சியில் நிறைவு செய்தன.

Stock Market Today 23 March 2023
பங்குச் சந்தை இன்றைய நிலவரம் மார்ச் 23 2022

புதன்கிழமை (நவ.2) வர்த்தகத்தில் ஏர்டெல் பங்குகள் 3 சதவீதம் வரை சரிவை கண்டன. சன் பார்மா, ஐ.டி.சி. உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தை கொடுத்தன.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 215.26 புள்ளிகள் சரிவை கண்டு 60,906.09 எனவும் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 62.55 புள்ளிகள் சரிந்து 18082.85 எனவும் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
தேசிய பங்குச் சந்தையில் அதானி போர்ட் அண்ட் ஸ்பெஷல், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பிரிட்டானியா, சிப்லா, கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.சி.எல்.டெக், ஹெச்டிஎஃப்சி லைப் இன்சூரன்ஸ், இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவை கண்டன.

மறுபுறம் அதானி எண்டர்பிரைசஸ், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபின்சர்வ், பிபிசிஎல், கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபம் பார்த்தன.
மும்பை பங்குச் சந்தையில் டாக்டர் ரெட்டிஸ் லேப், ஹெச்டிஎஃப்சி, ஐடிசி உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்திலும் ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்சிஎல் டெக் நஷ்டத்தையும் சந்தித்தன.

ஏர்டெல் கடும் சரிவு
மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பார்தி ஏர்டெல் 3 சதவீதம் வரை சரிவை கண்டது. மறுபுறம் சன் பார்மா, ஐடிசி நிறுவன பங்குகள் லாபத்தில் வணிகமாகின.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Today nifty gainers and losers november 02 2022 airtel becomes top loser