புதன்கிழமை வர்த்தகத்தை இந்திய பங்குச் சந்தைகள் சரிவில் நிறைவு செய்தன. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 151.6 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை சென்செக்ஸ் 45.8 புள்ளிகளும் வீழ்ச்சி கண்டன.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 30 பங்குகளில் ஆக்ஸிஸ் வங்கி, டாக்டர் ரெட்டிஸ் லேப், ஹெச்சிஎல் டெக், இண்டஸ்இந்த், இன்ஃபோசிஸ், ஐடிசி, கோடக் மஹிந்திரா மற்றும் எஸ்பிஐ பங்குகள் லாபம் பார்த்தன.
மீதமுள்ள அனைத்து பங்குகளும் சரிவில் வர்த்தகம் ஆகின. அந்தப் பங்குகள் ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி வங்கி, இந்துஸ்தான் யூனிலிவர், ஐசிஐசிஐ, லார்சன் அண்ட் டர்போ, மகிந்திரா அண்ட் மகிந்திரா, மாருதி சுசூகி, நெஸ்லே, என்டிபிசி, பவர் கிரிட் கார்ப், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன்பார்மா இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், டெக் மகிந்திரா, டைடன் கோ, டெக் மகிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், விப்ரோ உள்ளிட்டவை ஆகும்.
இதேபோல் தேசிய பங்குச் சந்தையில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட் அண்ட் ஸ்பெஷல், ஆக்ஸிஸ் வங்கி, பிரிட்டானியா, கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்திலும், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தையும் சந்தித்தன.
இன்றைய (நவ.9) பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி முறையே 0.25 சதவீதம் சரிந்து காணப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil