வெள்ளிக்கிழமை (நவ.11) பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை 1.95 சதவீதமும், தேசிய பங்குச் சந்தை 1.78 சதவீதமும் உயர்ந்து வணிகமாகின.
தேசிய பங்குச் சந்தையில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட் அண்ட் ஸ்பெஷல், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தில் வணிகத்தை நிறைவு செய்தன.
மறுபுறம் பிரிட்டானியா, சிப்லா, கோல் இந்தியா, திவிஸ் லேப், டாக்டர் ரெட்டிஸ் லேப் உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தை எதிர்கொண்டன.
மும்பை பங்குச் சந்தையை பொருத்தமட்டில் ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்திலும், டாக்டர் ரெட்டிஸ் லேப், இந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, கோடக் மகிந்திரா வங்கி, மகிந்திரா அண்ட் மகிந்திரா உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்திலும் வணிகத்தை நிறைவு செய்தன.
இன்றைய பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1181.34 புள்ளிகளும், நிஃப்டி 321.5 புள்ளிகளும் உயர்ந்தன.
ஹெச்.டி.எஃப்.சி. பங்குகள் அபாரம்
இன்றைய வர்த்தகத்தில் ஹெச்டிஎஃப்சி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி நிறுவன பங்குகள் 5 சதவீதம் வரை லாபம் பார்த்தன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil