திங்கள்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியில் முடிவுற்ற நிலையில் இன்று (ஆக.30) பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகம் ஆகிவருகின்றன.
இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் காலை முதலே லாபத்தில் வர்த்தகம் ஆகின. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 50 புள்ளிகளும், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 300 புள்ளிகளும் உயர்வுடன் வணிகமாகின்றன.
பஜாஜ் ஃபின்சர்வ், டாடா ஸ்டீல், இன்டஸ்இந்த் வங்கி, ஓஎன்ஜிசி, பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் அல்ட்ரா டெக் நிறுவன பங்குகள் உயர்வுடன் வணிகமாகின்றன.
தேசிய பங்குச் சந்தையில் பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகள் சிவப்பு கட்டத்தில் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 490.94 (0.85) புள்ளிகள் அதிகரித்து 58,463.56 ஆகவும், தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 142.05 (0.82) புள்ளிகள் அதிகரித்து 17454.95 புள்ளிகளாகவும் தொடர்ந்து வர்த்தகம் ஆகி வருகிறது.
மும்பை பங்குச் சந்தையில் பஜாஜ் ஃபைனான்ஸும், தேசிய பங்குச் சந்தையில் அதானி போர்ட் மற்றும் ஸ்பெஷல் பங்குகளும் அதிகபடியான லாபத்தில் வர்த்தகம் ஆகிறது. இரு சந்தைகளிலும் பார்தி ஏர்டெல் கடும் வீழ்ச்சி கண்டும் வர்த்தகமாகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“