இன்றைய பங்கு வர்த்தகத்தின் நிறைவில் மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) 727.18 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 125.65 புள்ளிகளும் சரிந்து வணிகமாகின.
இதற்கு மத்தியில் இன்ஃபோசிஸ், லார்சன் அண்ட் டர்போ, டிசிஎஸ் நிறுவன பங்குகள் லாபத்தில் வர்த்தகமாகின.
மறுபுறம் ஆக்ஸிஸ் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. இதில் அதிகப்பட்சமாக பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவன பங்குகள்193.45 (2.58) வீழ்ச்சி கண்டன.
தேசிய பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல், பஜாஜ் ஆட்டோ, ஈசர் மோட்டர்ஸ், இன்ஃபோசிஸ் மற்றும் லார்சன் அண்ட் டர்போ நிறுவன பங்குகள் லாபத்தில் இயங்கின.
அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தில் வணிகமாகின.
இதில் அதிகப்பட்சமாக அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் நிறுவன பங்குகள் ரூ.125.65 (2.94) வரை வீழ்ச்சிகண்டன. மேலும் சிப்லா, கோல் இந்தியா, கிராஸிம் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்சிஎல், ஹெச்டிஎஃப்சி, |கோடாக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவன பங்குகளும் முதலீட்டாளர்களின் கைககளை கடித்தன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil