சென்னையில் குறைந்த காய்கறி விலை… இதைவிட என்ன வேண்டும்?

வெங்காயம் மற்றும் தக்காளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.

chennai vegetable market vegetable price
chennai vegetable market vegetable price

tomato onion tamil vegetables tamil : சென்னையில் கடந்த மூன்று மாதங்களாகவே காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மிக அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். எனினும் தீபாவளிப் பண்டிகை சமயத்தில் காய்கறிகளின் விலையில் வீழ்ச்சி காணப்பட்டது. ஆனால் இன்று மீண்டும் அவற்றின் விலை உயர்ந்துள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (டிசம்பர் 14) ஒரு கிலோ அவரைக்காய் 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை 45 ரூபாயாக இருந்தது. ஒரே நாளில் 15 ரூபாய் குறைந்துள்ளது. வெங்காயம் மற்றும் தக்காளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெங்காயம் 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பீன்ஸ் விலை நேற்று 35 ரூபாயிலிருந்து இன்று 30 ரூபாயாகக் குறைந்துள்ளது.

காய்கறிகளின் விலைப் பட்டியல்:

தக்காளி – ரூ.15
வெங்காயம் – ரூ.30
அவரைக்காய் – ரூ.30
பீன்ஸ் – ரூ.30
பீட்ரூட் – ரூ.15
வெண்டைக்காய் – ரூ.20
மாங்காய் – ரூ.40
நூக்கல் – ரூ.15
உருளைக் கிழங்கு – ரூ.30
முள்ளங்கி – ரூ.10

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tomato onion tamil vegetables tamil koyambedu market price vegetables

Next Story
சேமிப்பு கணக்கை பணம் கொட்டும் கணக்காக மாற்றும் வழி இதுதான்!sbi savings sbi sbi savings account
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com