வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையோரம் நகரக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையொட்டி சென்னையில் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகளின் விலை சட்டென உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் நேற்று ரூ.80க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.140 வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோயம்பேடு சந்தைக்கு தினசரி 1300 டன் தக்காளி வருவது வழக்கம். தற்பொழுது பெய்து வரும் கனமழை காரணமாக அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்து வெறும் 800 டன் மட்டுமே வந்துள்ளதால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“