Fixed deposits: பெரும்பாலும் முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். இந்திய ரிசர்வ் வங்கியின் 2022 நிதியாண்டு தரவுகளின்படி, மொத்த வங்கி டெபாசிட்டில் 76 சதவீதம் ஏழு பொதுத்துறை வங்கிகளும் மூன்று தனியார் வங்கிகளும் உள்ளன.
முதலீட்டாளர்கள் முன்னணி பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். சிறிய தனியார் வங்கிகள் மற்றும் சிறு நிதி வங்கிகள் புதிய டெபாசிட்களைப் பெற அதிக வட்டி விகிதங்களை வழங்கினாலும் யதார்த்த நிலை இதுதான்.
பாரத ஸ்டேட் வங்கி
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) மொத்த வங்கி வைப்புத்தொகையில் 23 சதவீதத்தை கொண்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளில், டெர்ம் டெபாசிட்டில் 36 சதவீத சந்தை பங்கு உள்ளது.
ஹெச்டிஎஃப்சி வங்கி
தனியார் வங்கிகளில், ஹெச்டிஎஃப்சி வங்கி மொத்த வங்கி வைப்புத் தொகையில் 8 சதவீதத்தைக் கொண்டு, இரண்டாவது வங்கியாக உள்ளது. தனியார் வங்கிகளில், டெர்ம் டெபாசிட்களில் 28 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது.
கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
எஸ்பிஐக்கு அடுத்தபடியாக பொதுத்துறை வங்கிகளில், கனரா வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் உள்ளன.
இவை, மொத்த வங்கி வைப்புத்தொகையில் 7 சதவீதத்தை கொண்டுள்ளன. பொதுத்துறை வங்கிகளான கனரா வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில், கால வைப்புகளில் முறையே 12 சதவீதம் மற்றும் 11 சதவீதம் சந்தை பங்கு உள்ளது.
பேங்க் ஆஃப் பரோடா, ஐசிஐசிஐ
பேங்க் ஆஃப் பரோடா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய இரண்டும் மொத்த வங்கி வைப்புத்தொகையில் 6 சதவீதத்தை வைத்துள்ளன. பொதுத்துறை வங்கிகளான பேங்க் ஆப் பரோடா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிகளில், இரண்டுமே டெர்ம் டெபாசிட்களில் 10 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ளன.
ஆக்சிஸ் வங்கி
முதலீட்டாளர்கள் FD-களில் முதலீடு செய்ய விரும்பும் முதல் பத்து வங்கிகளின் பட்டியலில் மூன்றாவது தனியார் வங்கி ஆக்சிஸ் வங்கி ஆகும். இது மொத்த வங்கி வைப்புத்தொகையில் 5 சதவீதத்தை கொண்டுள்ளது.
இந்தியன் வங்கி
முதலீட்டாளர்கள் FD களில் முதலீடு செய்ய விரும்பும் வங்கிகளின் முதல் பத்து பட்டியலில் உள்ள கடைசி இரண்டு வங்கிகள் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் வங்கி ஆகும்.
இவை, மொத்த வங்கி வைப்புத்தொகையில் 4 சதவீதத்தை கொண்டுள்ளன. பொதுத்துறை வங்கிகளில், அவை இரண்டும் டெர்ம் டெபாசிட்களில் 6 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“