இந்தியாவில் மியூச்சுவல் ஃபன்ட் முதலீடுகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளன. அதன்படி, உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்கும் சில மியூச்சுவல் ஃபன்ட் குறித்து இதில் பார்க்கலாம்.
1. குவாண்ட் ஸ்மால் கேப் ஃபன்ட் (Quant Small Cap Fund)
5 ஆண்டு வருவாய்: 47.4%
10 ஆண்டு வருவாய்: 21.9%
குவாண்ட் ஸ்மால் கேப் ஃபன்ட் கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமான வருமானத்தை அளித்து ஸ்மால்-கேப் (small-cap) வகையை வழிநடத்தியுள்ளது. இந்த நிதியானது சிறிய நிறுவனங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கம் காரணமாக அதிக ஆபத்தை உள்ளடக்கியிருந்தாலும், அதிக வளர்ச்சிக்கு சாத்தியமான ஸ்மால்-கேப் பங்குகளில் கவனம் செலுத்துகிறது. ஸ்மால் கேப் எக்ஸ்போஷர் மூலம் அதிகபட்ச வளர்ச்சியை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு இது ஏற்றதாக அமையும்.
2. குவாண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் ஃபன்ட் (Quant Infrastructure Fund)
5 ஆண்டு வருவாய்: 37.9%
10 ஆண்டு வருவாய்: 20.4%
உள்கட்டமைப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்தியாவில் இது விரைவான வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்த ஃபன்டின் வருவாய், கட்டுமான துறையின் வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தி துறை சார்ந்த வளர்ச்சியை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு இவை ஏற்றதாக அமையும்.
3. நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபன்ட் (Nippon India Small Cap Fund)
5 ஆண்டு வருவாய்: 36.6%
10 ஆண்டு வருவாய்: 23.5%
ஸ்மால்-கேப் பிரிவில் முன்னணி நிதிகளில் ஒன்றான நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபன்ட், அதிக வளர்ச்சி திறன் கொண்ட வளர்ந்து வரும் சிறிய நிறுவனங்களில் கவனம் செலுத்துவதன் காரணமாக நிலையான வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. ஸ்மால்-கேப் வகையில் தீவிரமான வளர்ச்சியைத் தேடும் முதலீட்டாளர்கள் இதனை பரீசிலிக்கலாம்.
4. குவான்ட் ஃப்ளிக்ஸி கேப் ஃபன்ட் (Quant Flexi Cap Fund)
5 ஆண்டு வருவாய்: 35.5%
10 ஆண்டு வருவாய்: 21.2%
பல்வேறு சந்தைத் தொகுப்புகளில் முதலீடு செய்வதற்கான நெகிழ்வுத்தன்மையுடன் குவான்ட் ஃப்ளிக்ஸி கேப் ஃபன்ட் விளங்குகிறது. மாறிவரும் சந்தை நிலைமைகளுக்கு ஏற்றவாறு, பல்வேறு துறைகளில் வளர்ச்சி வாய்ப்புகளுடன் ஸ்திரத்தன்மையை இது சமநிலைப்படுத்துகிறது. பலதரப்பட்ட வெளிப்பாடுகளை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு இது ஏற்றதாக அமையலாம்.
5. எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட் (SBI Small Cap Fund)
5 ஆண்டு வருவாய்: 29.1%
10 ஆண்டு வருவாய்: 22.7%
இதன் பங்குகள் பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோவை வழங்குகிறது. நீண்ட கால வளர்ச்சியை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள் மத்தியில் இந்த பங்குகள் பிரபலமாக உள்ளன. சிறிய, உயர்-வளர்ச்சி நிறுவனங்களில் அதிக வருமானத்தை இலக்காகக் கொண்ட முதலீட்டாளர்களுக்கு இவை ஏற்றதாக இருக்கும்.
6. ஆக்சிஸ் ஸ்மால் கேப் ஃபண்ட் (Axis Small Cap Fund)
5 ஆண்டு வருவாய்: 29.4%
10 ஆண்டு வருவாய்: 20.6%
ஆக்சிஸ் ஸ்மால் கேப் ஃபன்ட், விரைவான வளர்ச்சிக்கு சாத்தியமான சிறிய நிறுவனங்களில் கவனம் செலுத்துகிறது. முதலீட்டாளர்களுக்கு வளர்ந்து வரும் வணிகங்களில் இருந்து லாபம் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
7. எச்எஸ்பிசி ஸ்மால் கேப் ஃபண்ட் (HSBC Small Cap Fund)
5 ஆண்டு வருவாய்: 31.0%
10 ஆண்டு வருவாய்: 20.4%
ஸ்மால்-கேப் நிறுவனங்களின் பல்வேறு போர்ட்ஃபோலியோவுடன், எச்எஸ்பிசி ஸ்மால் கேப் ஃபன்ட் கடந்த ஐந்து ஆண்டுகளில் திடமான வருமானத்தை அளித்துள்ளது. இது அதிக வளர்ச்சி திறன் கொண்ட வளர்ந்து வரும் நிறுவனங்களை குறிவைக்கிறது. மூலதன மதிப்பீட்டில் கவனம் செலுத்துபவர்கள் இதனை பரீசிலிக்கலாம்.
8. டிஎஸ்பி ஸ்மால் கேப் ஃபண்ட் (DSP Small Cap Fund)
5 ஆண்டு வருவாய்: 31.2%
10 ஆண்டு வருவாய்: 20.4%
டிஎஸ்பி ஸ்மால் கேப் ஃபன்ட், ஸ்மால் கேப் நிறுவனங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் நிலையான வருமானத்தின் உறுதித் தன்மை கொண்டுள்ளது. நிதியின் செயல்திறன் வலுவான மேலாண்மை மற்றும் ஸ்மார்ட் ஸ்டாக் தேர்வை இது குறிக்கிறது. ஸ்மால் கேப் பிரிவில் ஸ்திரத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது ஏற்றதாக அமையும்.
9. மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் நிதி (Motilal Oswal Midcap Fund)
5 ஆண்டு வருவாய்: 32.4%
10 ஆண்டு வருவாய்: 21.6%
மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் நிதி குறிப்பிடத்தக்க வளர்ச்சி திறன் கொண்ட மிட்-கேப் நிறுவனங்களுக்கு வெளிப்பாட்டை வழங்குகிறது. மிட்-கேப் ஃபன்டுகள் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு இடையே சமநிலையை வழங்குகின்றன.
10. Edelweiss Mid Cap Fund
5 ஆண்டு வருவாய்: 30.9%
10 ஆண்டு வருவாய்: 20.8%
இந்த ஃபன்ட் அதிக வளர்ச்சிக்கு சாத்தியமான மிட் கேப் பங்குகளில் முதலீடு செய்கிறது. Edelweiss Mid Cap Fund மற்ற மிட்-கேப் நிதிகளை விட சிறப்பாக செயல்படுகிறது. அதன் வலுவான மேலாண்மை மற்றும் போர்ட்ஃபோலியோ உத்தியை நிரூபிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.