20 வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட்: எந்த பேங்கில் பெஸ்ட் ரிட்டன்?
ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு நல்ல வருவாய் கொடுக்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம். இதில் 20 வங்கிகளின் பட்டியல் உள்ளது. எஃப்.டியில் மூத்தக் குடிமக்களுக்கு 0.50 சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கிறது.
Fixed Deposits | இன்றைய காலகட்டங்களில் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் நல்ல முன்னேற்றம் கண்டுவருகின்றன. 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு வங்கிகள் 3.5 சதவீதம் முதல் 9 சதவீதத்துக்கும் மேல் வட்டி விகிதங்களை வழங்கிவருகின்றன.
Advertisment
அந்த வகையில், ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு நல்ல வட்டி வழங்கும் 20 வங்கிகளின் பட்டியலை பார்க்கலாம்.
வங்கி
அதிகப்பட்ச வட்டி விகிதம் (%)
மூத்தக் குடிமக்கள் சிறப்பு வட்டி விகிதம் (%)
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
9.00
0.50
சூர்யாடே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
8.65
0.25-0.50
ஷிவ்னிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
8.55
0.50
ஈகுடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
8.50
0.50
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
8.50
0.50
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
8.50
0.60
உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
8.50
0.50
எஸ்.பி.எம். வங்கி
8.25
0.50
இ.எஸ்.ஏ.எஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
8.25
0.50
ஆர்.பி.எல் வங்கி
8.10
0.50
ஏ.யூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
8.00
0.50
ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
8.00
0.50
டி.சி.பி வங்கி
8.00
0.30-0.50
ஐ.டி.எஃப்.சி. வங்கி
8.00
0.50
பந்தன் வங்கி
7.85
0.50-0.75
இண்டஸ்இந்த் வங்கி
7.75
0.50
யெஸ் வங்கி
7.75
0.50
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
7.25
0.50
பஞ்சாப் நேஷனல் வங்கி
7.25
0.50
பேங்க் ஆஃப் பரோடா
7.25
.50-1.00
ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் குறுகிய கால வைப்பு காலம் 7 நாட்கள் முதல் 12 மாதங்கள் வரை இருக்கலாம். நீண்ட கால வைப்புத்தொகை 1 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை இருக்கும். வழங்கப்படும் FD வட்டி விகிதங்கள் காலத்தைப் பொறுத்து வங்கிக்கு வங்கி மாறுபடும். மேற்கூறியவை தவிர, ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கியானது பொதுக் குடிமக்களுக்கு 7 நாள்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்கு 3% முதல் 6.00% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
இதேபோல் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியும் பொதுக் குடிமக்களுக்கு 7 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்கு 3% முதல் 6.00% வரையிலான வட்டி விகிதங்களை வங்கி வழங்குகிறது. பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) பொது குடிமக்களுக்கு 7 நாள்கள் முதல் ஒரு வருடம் வரை 3% முதல் 5.75% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“