Advertisment

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு அதிக வட்டி: இந்த 5 வங்கியை நோட் பண்ணுங்க

எஸ்பிஐ வழக்கமான குடிமக்களுக்கு ஒரு வருட எஃப்டியில் 6.8 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதிகபட்ச வட்டி 7.10% 400 நாள்கள் முதலீடு திட்டத்துக்கு வழங்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
போலீசில் புகார்

ஹெச்டிஎஃப்சி வங்கி ஒரு வருட கால வைப்புத்தொகைக்கு ஆண்டுக்கு 6.6 சதவீத வட்டியை வழங்குகிறது.

highest fixed deposits interest rates: பெரும்பாலான வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இருந்ததை விட ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்கு அதிக வட்டி விகிதங்களை தற்போது வழங்குகின்றன.

இதற்கிடையில், கடந்த ஆண்டு மே மாதம் முதல், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தொடர்ச்சியான பணவியல் கொள்கை மதிப்பாய்வுகளில் பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தை மொத்தம் 250 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தி உள்ளது.

Advertisment

பாரத ஸ்டேட் வங்கி: எஸ்பிஐ வழக்கமான குடிமக்களுக்கு ஒரு வருட எஃப்டியில் 6.8 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதிகபட்ச வட்டி 7.10% 400 நாள்கள் முதலீடு திட்டத்துக்கு வழங்கப்படுகிறது.

இந்தக் குறிப்பிட்ட தவணைக்காலத் திட்டம் டிசம்பர் 31, 2023 அன்று முடிவடையும். மூத்த குடிமக்கள் 50 அடிப்படைப் புள்ளிகள் அதிகம் பெறுவார்கள்.

ஐசிஐசிஐ வங்கி: இரண்டாவது பெரிய தனியார் கடன் வழங்குபவர் ஓராண்டுக்கான எஃப்டிக்கு 6.7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. 15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான நிரந்தர வைப்புகளுக்கு அதிகபட்சமாக 7.10 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் கூடுதல் 50-55 அடிப்படை புள்ளிகள் பெறுவார்கள்.

ஹெச்டிஎஃப்சி வங்கி : இது ஒரு வருட கால வைப்புத்தொகைக்கு ஆண்டுக்கு 6.6 சதவீத வட்டியை வழங்குகிறது.

4 ஆண்டுகள் 7 மாதங்கள் முதல் 55 மாதங்கள் வரையிலான டெபாசிட்களுக்கு அதிகபட்சமாக 7.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் கூடுதல் 50 அடிப்படை புள்ளிகள் பெறுவார்கள்.

பாங்க் ஆஃப் பரோடா: இது ஒரு வருட டெபாசிட்டுக்கு 6.75 சதவீதத்தை வழங்குகிறது. ஆனால் 2-3 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட டெபாசிட்களுக்கு அதிகபட்சமாக 7.25 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் கூடுதல் 50 அடிப்படை புள்ளிகள் கூடுதலாக பெறுவார்கள்.

ஐடிஎஃப்சி வங்கி : தனியார் கடன் வழங்குபவர் அதன் ஓராண்டு வைப்புத்தொகையில் 6.5 சதவீதத்தை வழங்குகிறது. 1-2 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட கால வைப்புகளுக்கு அதிகபட்சமாக 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மேலும் மூத்த குடிமக்கள் கூடுதல் 50 அடிப்படை புள்ளிகளைப் பெறுவார்கள்.

வங்கி வட்டி  காலம்
எஸ்.பி.ஐ 7.10 400 நாள்கள் 
ஐசிஐசிஐ 7.10 15 மாதம்- 2 ஆண்டுகள்
ஹெச்டிஎஃப்சி 7.20 4 வருடம் 7 மாதம் முதல் 55 மாதங்கள் வரை
பாங்க் ஆஃப் பரோடா 7.25 2-3 ஆண்டுகள்
ஐடிஎஃப்சி 7.5 1-2 ஆண்டுகள்

IDFC ஃபர்ஸ்ட் பேங்க் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான FDக்கு தற்போது 7.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது, அதே நேரத்தில் பாங்க் ஆஃப் பரோடா 2-3 ஆண்டு கால FDக்கு 7.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment