பொதுவாகவே வங்கிகள் சார்ந்த முதலீடுகளுக்கு நல்ல வரவேற்புள்ளது. இது வட்டி குறைவு என்றாலும், மிக பாதுகாப்பான முதலீட்டாக கருதப்படுகிரது.
ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ, அக்சிஸ், ஐசிஐசிஐ வங்கி போன்ற மிகப்பெரிய நிறுவனங்களில் சேமிப்பு கணக்கிற்கு வட்டி விகிதம் 2.75 முதல் 3.50 வரையே இருக்கும். ஆனால், சிறிய நிதி நிறுவனங்களில் 7 விழுக்காடு வரை வட்டி தொகை பெறலாம். அந்த வகையில், அதிக வட்டி தரும் டாப் 5 ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் குறித்து தகவலை இச்செய்தி தொகுப்பில் காணலாம்
உஜ்ஜிவன் சிறு நிதி வங்கி
உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் தற்போது ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான வைப்பு தொகைக்கு, அதிகப்பட்சமாக 7 விழுக்காடு வட்டி தொகை வழங்கப்படுகிறது. 2021 மார்ச் 6 முதல், பின்வரும் வட்டி தொகை வழங்கப்படுகிறது.
தொகை | வட்டி விகிதம் |
1 லட்சம் வரை | 4% |
1 லட்சம் முதல் 25 லட்சம் வரை | 7% |
25 லட்சம் முதல் 10 கோடி வரை | 6% |
10 கோடிக்கு மேல் | 6.75% |
ஈக்விட்டாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி
ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 1 லட்சம் முதல் 1 கோடி வரையிலான வைப்பு தொகைக்கு, 7 விழுக்காடு வட்டி வழங்குகிறது. இந்த கணக்கில் 10 ஆயிரம் ரூபாய் குறைந்தப்பட்ச பணமாக பராமரிக்க வேண்டும். வேறு பராமரிப்பு செலவு எதுவும் கிடையாது. இந்த வட்டி தொகை அறிவிப்பு 2021 ஆகஸ்ட் 16 ஆம் தேதி வெளியானது.
பணம் | வட்டி விகிதம் |
1 லட்சம் வரை | 3.50% |
1 லட்சம் முதல் 1 கோடி வரை | 7% |
1 கோடிக்கு மேல் | 6% |
உட்கார்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி
உட்கார்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி 25 லட்ச ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரையிலான வைப்பு தொகைக்கு 7% வட்டி தொகை வழங்குகிறது. எந்த ஏடிஎம்மிலும் கட்டணின்றி உள்நாட்டு பரிவர்த்தனைகளும், NEFT/RTGS பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளலாம். கீழே குறிப்பிட்டுள்ள வட்டி விவகம் அக்டோர் 1 2021 முதல் அமலுக்கு வந்தது.
பணம் | வட்டி விகிதம் |
1 லட்சம் வரை | 3.5% |
1 லட்சம் முதல் 25 லட்சம் வரை | 6% |
25 லட்சம் முதல் 10 கோடி வரை | 7% |
10 கோடிக்கு மேல் | 6.75% |
ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கி
ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் ரூ. 25 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரையிலான உள்நாட்டு/என்ஆர்இ/என்ஆர்ஓ சேமிப்புக் கணக்கு தொகைக்கு 7% வட்டி வழங்குகிறது. அக்டோபர் 5, 2021 நிலவரப்படி, சேமிப்பு வங்கி டெபாசிட்டுகளுக்கான தற்போதைய பொருந்தக்கூடிய வட்டி விகிதங்கள் பின்வருமாறு.
பணம் | வட்டி விகதம் |
1லட்சம் வரை | 3.50% |
1 முதல் 10 லட்சம் வரை | 5% |
10 லட்சம் முதல் 25 லட்சம் வரை | 6% |
25 லட்சம் முதல் 1 கோடி வரை | 7% |
1 கோடி முதல் 10 கோடி வரை | 6% |
ஃபின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கி
இந்த சிறு நிதி வங்கியானது ரூ. 1 லட்சம் முதல் ரூ. 50 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட சேமிப்புக் கணக்கு நிலுவை தொகைக்கு 7% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த கணக்கின் வட்டி விகிதம் ஜூலை 1 2021 முதல் அமலுக்கு வருகிறது.
பணம் | வட்டி விகிதம் |
1லட்சம் வரை | 4.50% |
1 முதல் 5 லட்சம் வரை | 6% |
5 லட்சம் முதல் 1 கோடி வரை | 7% |
1 கோடி முதல் 2 கோடி வரை | 6% |
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.