FD-யை விடுங்க… இந்த டாப் 5 முதலீடு திட்டங்களை பாருங்க!

இந்த நிதி குறுகிய கால வட்டி விகித ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படுவதில்லை. இந்த நிதிகள் நிலையான வருமானத்தை வழங்க முடியும்

Top 5 investment options to look at beyond bank fixed deposits : முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஃபிக்ஸட் டெபாசிட்டிற்கான வட்டி மிகவும் குறைவாகவே உள்ளது. பணவீக்கம் ஆகியவற்றை எல்லாம் மதிப்பு செய்தால், ரிட்டர்ன்ஸ் நெகட்டிவாகவே இருக்கும். நிலையான வருமானத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளார்களுக்கு சரியான தேர்வாக தற்போது எஃப்.டி. இல்லை. எனவே உங்கள் பணத்தை மிகவும் பாதுகாப்பான இடத்தில் வைத்து நிலையான ரிட்டர்ன்ஸை பெற வேண்டுமா? தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் 5 முக்கிய முதலீட்டு திட்டங்கள் குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ள உள்ளோம்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (Senior Citizens Saving Scheme (SCSS))

மூத்த குடிமக்களுக்கு மிகவும் சரியான சேமிப்பு திட்டமாக இது இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட எவர் வேண்டுமானாலும் இந்த சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதன் தற்போதைய வட்டியானது 7.4% ஆக உள்ளது. இதன் மெச்சூரிட்டி காலம் 5 ஆண்டுகளாகும். ஐ.டி. பிரிவு 80சியின் கீழ் இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் வரி விலக்கு பெற இயலும். ஆனாலும் ஒரு நபர் இதில் ரூ. 15 லட்சம் வரை மட்டுமே செலுத்த இயலும்.

ப்ரதான் மந்திரி வாய் வந்தன யோஜனா

இந்த திட்டம் இந்திய அரசால் வழங்கப்படுகிறது. இதன் வட்டி விகிதம் 7.4% ஆக உள்ளது. இருப்பினும் லாக்-இன் காலம் 10 ஆண்டுகள் ஆகும். மாதம் மாதம் உங்களின் முதலீட்டிற்கான வட்டி உங்களுக்கு கிடைத்துவிடும். மிகவும் பாதுகாப்பான முதலீட்டு திட்டத்தை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள் என்றால் இது உங்களுக்கு மிகவும் ஏற்றது.

என்.பி.எஸ். டயர் 2 கணக்கு

ஏற்கனவே என்.பி.எஸ் திட்டத்தை ஒரு முதலீட்டாளர் வைத்திருந்தால் அவரால் இந்த கணாக்கையும் துவங்க முடியும். அரசுப் பத்திரங்கள் மற்றும் இதர தொடர்புடைய கருவிகளில் முதலீடு செய்யும் NPS அடுக்கு II கணக்குத் திட்டம் G, கடந்த ஒரு வருடத்தில் இரட்டை இலக்க வருவாயைக் கொடுத்துள்ளது. ஆனாலும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் நபர்களுக்கு வருமான வரிவிலக்கு பிரிவு 80சியின் கீழ் கிடைக்காது.

Corporate Bond Funds

இவை கார்ப்பரேட் பத்திரங்கள் மற்றும் நான் – கன்வெர்டிபிள் கடன் பத்திரங்களிலு முதலீடு செய்யும் திட்டமாகும். இந்த நிதிகள் குறைந்தபட்சம் 80% சொத்துக்களை அதிக மதிப்பிடப்பட்ட நிறுவன பத்திரங்களில் முதலீடு செய்வதால், ஆபத்து கணிசமாக குறைவாக உள்ளது. இந்த நிதிகள் 9%வரை வருமானத்தை வழங்கியுள்ளன. எனவே, குறைந்த அபாயத்துடன் வழக்கமான வருமானத்தைத் தேடும் ஒருவருக்கு சிறந்த தேர்வாக இது இருக்க இயலும். மற்றொரு நன்மை என்னவென்றால், முதலீட்டாளர் இந்த நிதியை மூன்று வருடங்கள் வைத்திருந்தால், மூலதன ஆதாயங்களைக் கணக்கிடும்போது இந்த நிதிகள் கடன் நிதிகளாக வகைப்படுத்தப்படுவதால், அவர் கேப்பிட்டல் நன்மைகளை பெற முடியும்.

குறுகிய கால நிதி

அதிக வருவாய்க்கு சிறிய அளவு ரிஸ்க் எடுக்க தயங்காத நபர்களுக்கு சரியான திட்டமாக இது இருக்கும். இந்த நிதிகள் வட்டி வருமானம் மற்றும் மூலதன ஆதாயங்களை சம்பாதிப்பதால், அவை ஃபிக்ஸ்ட் டெபாசிட் பலன்களைக் காட்டிலும் அதிக வருமானத்தை வழங்குகின்றன. இந்த நிதி குறுகிய கால வட்டி விகித ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படுவதில்லை. இந்த நிதிகள் நிலையான வருமானத்தை வழங்க முடியும். ஒருவர் தனது தேவைகளுக்கு ஏற்ப முறையான திரும்பப் பெறும் திட்டம் (SWP) மூலம் நிதியை திரும்பப் பெறலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Top 5 investment options to look at beyond bank fixed deposits

Next Story
புதிய ரூ.200 நோட்டுகள் அச்சடிக்கும் பணிகள் தொடக்கம்!RBI, Reserve Bank of India
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com